டெல்லி குண்டுவெடிப்பு | அனைத்து கோணங்களிலும் விசாரணை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல் 

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அரு​கில் நேற்று முன்​தினம் மாலை​யில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம், நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இந்த சம்​பவத்​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்​தனர். இதுதொடர்​பாக ‘எக்​ஸ்’ தளத்​தில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டுள்ள பதி​வில், “டெல்லி குண்​டு​வெடிப்பு உயி​ரிழப்​பால் எனக்கு ஏற்​பட்ட வேதனையை வார்த்​தைகளால் விவரிக்க இயலாது. அன்​புக்​குரிய​வர்​களை இழந்​தவர்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரிவித்துக் கொள்கிறேன். குண்​டு​வெடிப்பு நடந்த இடத்தைப் … Read more

“பாஜகவுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இதுதான் இறுதித் தேர்தல்” – செந்தில் பாலாஜி பேச்சு

கோவை: “தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இதுதான் இறுதித் தேர்தல்” என கோவையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம், கோவை சிவானந்தா காலனியில் இன்று (நவ.11) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சரும், … Read more

உங்க வீட்ல மின்கட்டணம் அதிகரித்துள்ளதா? இதை மட்டும் பண்ணுங்க.. ரொம்ப கம்மியாகும்

Electricity Bill: கடந்த இரண்டு மாதங்களில் உங்கள் வீட்டில் மின்கட்டணம் உயர்ந்திருந்தால், இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் மின்கட்டணம் வரும் மாதங்களில் குறையக் கூடும்.

“தமிழக தேர்தல் களத்தில் ஒரு தொண்டராக பணியாற்றுவேன்” – நிர்மலா சீதாரமன் பேச்சு

கோவை: “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிதியமைச்சராக அல்ல, கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” என கட்சி நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: ”தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நிதி அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தபடுகிறது. அந்த சங்கத்தின் தலைவர் … Read more

பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி.. வேலூரில் சோகம்!

Child dies after being trapped in school bus: வேலூர் குடியாத்தம் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தின் முன் சக்கர டயரில் சிக்கி நசுங்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

“ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்” – நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் எம்எல்ஏ, வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: “ஜிஎஸ்டி வரி மாற்றம் செய்யப்பட்டதால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. தமிழ்நாடு … Read more

பள்ளிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு மற்றும் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி, மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முடிந்தவுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் தொடர்ச்சியாக 12 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஹாஸ்டல்களுக்கு சொத்து வரி கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஹாஸ்டல்கள் என்பது வணிக கட்டிடங்கள் அல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்தக் கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்களுக்கான ஹாஸ்டல்களுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை செலுத்தக் கூறி, சென்னை, கோவை மாநகராட்சிகளின் சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி, ஹாஸ்டல் உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் … Read more

மாதம் ரூ.70,000 சம்பளம்.. ஏர்போர்ட்டில் வேலை – தமிழக அரசு தரும் சூப்பர் வாய்ப்பு

Tamil Nadu Government: சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANADA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து முழுமையாக பார்ப்போம்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.12) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை ஒரிரு இடங்களிலும், … Read more