Tamil News Live Update: இந்தியாவில் 19 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates பூஸ்டர் டோஸ் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைத்து,  மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (07.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 07/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 13/10 உருளை 33/25/20 சின்ன வெங்காயம் 30/26/20 ஊட்டி கேரட் 50/45/35 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 70/65/60 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 28/26 சவ் சவ் 20/15 முள்ளங்கி 20/18 முட்டை கோஸ் 30/20 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 15/10 வரி கத்திரி … Read more

பின்வாசல் வழியாக அரசுப் பணியில் சேருபவர்களை எந்தச் சூழலிலும் பணி வரன்முறை செய்யக் கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பின்வாசல் வழியாக அரசுப் பணியில் சேருபவர்களை, எந்தச் சூழலிலும் பணி வரன்முறை செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கடந்த 2007-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையின்படி, நீண்டகாலமாக தற்காலிக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தங்களை, பணி நிரந்தரம் செய்யக் கோரி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் மூலமாக நியமிக்கப்பட்ட கோவிந்தராசு, திவ்யா … Read more

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரான சந்திரசேகரின் நிறுவனத்தில் 2வது நாளாக தொடரும் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் வலது கரமான கோவை வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  கே.சி.பி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியுடன் மிகவும் நெருக்கமானவர் வடவள்ளி சந்திரசேகர். பொறியாளரான இவர், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராக உள்ளார். மேலும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கிறார். இவரது … Read more

இளையராஜா, பி.டி உஷா ஆகியோருக்கு நியமன எம்.பி பதவி; மோடி வாழ்த்து

இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கணை பி.டி.உஷா, திரைக்கதை ஆசிரியர் … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் … Read more

வேளாங்கண்ணியில் பாவம்… மனைவியின் 96 காதலனை கார் ஏற்றிக் கொன்ற கணவன்..! சினிமா பாணியில் சேசிங் மர்டர்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில், ’96’ பட பாணியிலான மனைவியின் பள்ளிப்பருவ காதலனை கார் ஏற்றிக் கொலை செய்ததாக கணவனையும், கணவனை கூலிப்படை ஏவிக் கொல்ல முயன்றதாக மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே உள்ள ஏஞ்சல் ரெசிடன்ஸி தங்கும் விடுதியின் உரிமையாளர் வினோத் விக்டர். இவரது மனைவி மரிய ரூபினா மார்ட்டினா. கடந்த வருடம் வினோத் விக்டர் வெளி நாட்டிற்கு மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றதால், … Read more

குடியுரிமையை திருப்பி தராதது ஏன்? – வைரலாகும் லீனா மணிமேகலையின் பழைய பதிவு

சென்னை: காளி படத்தின் சுவரொட்டி சர்ச்சையால் மேலும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார் லீனா மணிமேகலை. கடந்த 2013-ம் ஆண்டு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக கடந்த 2013-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். இதுகுறித்து லீனா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘நான் வாழ்நாளில் பிரதமராக நரேந்திர மோடியை பார்க்க நேரிட்டால், எனது பாஸ்போர்ட், ரேஷன், பான்கார்டுகளை கொடுத்து குடியுரிமையையும் ஒப்படைப்பேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார். … Read more