கை விரித்த உச்ச நீதிமன்றம்.. ஓபிஎஸ் கையில் இருக்கும் இறுதி வாய்ப்பு.. இன்று நடக்க போகும் மாற்றம்.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.  கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான … Read more

கூலி தொழிலாளியை மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவலர் கைது..!

திருவண்ணாமலை அருகே செம்மரக் கடத்தல் வழக்குப்பதிவு செய்வதாக கூறி கூலி தொழிலாளியை மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவலர் கைது செய்யப்பட்டார். ஜமுனாபுரத்தூர் காவல்நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்த விஜய் என்பவர் சிந்தாலூரைச் சேர்ந்த செங்கல்சூளை கூலி தொழிலாளியான கோவிந்தராஜை மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் வாணாபுரம் காவல் நிலையத்திற்கு காவலர் விஜய் பணிமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, பணம் கேட்டு மிரட்டியதால் ரசாயனம் தடவிய … Read more

ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணிகளைத் தொடர்வதே நம் கடமை – தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: விமர்சனங்களை புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணியை தொடர்வதே நம் கடமை. மக்களைத் தேடிச் சென்று, குறைகளை கேட்டறிந்து தீர்த்திடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஓராண்டை வெற்றிகரமாக கடந்துள்ள திமுக ஆட்சி, ஓய்வின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. அரசின் பணிகள், பயன்கள் மாநிலத்தின் கடைக்கோடிவரை சென்று சேரவேண்டும் என்பதே எனது நோக்கம். அதை உறுதி செய்யவே மாவட்டம்தோறும் பயணிக்கிறேன். திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்ட … Read more

`ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் இன்றும் சோதனை தொடரும்!’- வருமான வரித்துறை தகவல்

நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே அலுவலகம் மற்றும் அந்நிறுவனர் செய்யாத்துரையின் வீடுகளில் வருமானவரித் துறையினர் நேற்றைய தினம் நள்ளிரவு வரை சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேற்கொண்டு இன்றும் விசாரணை தொடரும் என தகவல் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை ஒப்பந்த நிறுவணமான எஸ்.பி.கே கண்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவணம், அருப்புக்கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகம் மதுரைசாலை ராகவேந்திரா நகரில் செயல்பட்டு வருகிறது. … Read more

தமிழகத்தில் இந்த தாலுகாவில் மட்டும் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், இன்று கோவை, நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் … Read more

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டவற்றில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்?

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டவற்றில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி ஆளுநரின் ஒப்புதலுக்காக, சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன. முதல்வர் வலியுறுத்தல் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கும்போதேல்லாம், நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி வந்தார். அதன்படி, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில், வேந்தருக்குப் பதிலாக ஆய்வு மற்றும் விசாரணை அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குதல், கால்நடை மற்றும் … Read more

தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 7-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை … Read more

இது எந்த வகையிலும் நியாயமல்ல, உடனே ரத்து செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!

சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும்: உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சமையல் எரிவாயு விலை  மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1068.50 ஆக அதிகரித்திருக்கிறது. சமையல் எரிவாயு விலை ரூ.1000ஐக் கடந்த பிறகும் மாதம் தவறாமல்  தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல. சமையல் எரிவாயு விலை கடந்த 14 … Read more

ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி – ஓபிஎஸ் மனு மீது இன்று விசாரணை

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி ஜூலை 11-ம் தேதி நடத்தலாம் என அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உள்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர். மேலும், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளனர். சென்னையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. முன்னதாக, இதற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் … Read more