July Matha Rasi Palan 2022: ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Rasipalan 4th July 2022, Monday ராசிபலன் ஜூலை 4 திங்கள்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 4th July 2022: இன்றைய ராசி பலன், ஜூலை 4ம் தேதி 2022 … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம்.? வெளியான போஸ்டரால் பரபரப்பு.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனால், அடுத்த பொது செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தான் என அவரது ஆதரவாளர்களும், பதிலுக்கு ஓ பன்னீர்செல்வம் தான் என அவரது ஆதரவாளர்களும் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தை  பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நந்தன் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.  … Read more

காரைக்காலில் காலராவை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்.!

காரைக்காலில் காலரா பரவலை கட்டுப்படுத்த பொது சுகாதார அவசர நிலையை, குடும்ப நலன் மற்றும் பொது சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. கடந்த சில நாட்களாக கழிவு நீர் கலந்த குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 1,700க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தூய்மை பணிகள் மேற்கொள்ள பள்ளிக், கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலரா பரவல் தடுப்பு குறித்து சுகாதரத்துறை அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநர் … Read more

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாமக்கல்: உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என நாமக்கல்லில் நடந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். நாமக்கல் பொம்மைகுட்டைமேட்டில், திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நேற்று நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி.வரவேற்று பேசினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, மா.மதிவேந்தன், எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றதற்கு வாழ்த்து … Read more

`முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' – இன்று கையெழுத்தாகிறது 60 ஒப்பந்தங்கள்!

சென்னையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. `முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ என்ற பெயரில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில், இதுவரை 94 ஆயிரத்து 925 கோடி தொழில் முதலீடுகள் தமிழகம் வந்துள்ளதாகவும், இதன் மூலம் 2 லட்சத்து 26ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலீட்டு … Read more

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் ஆனிப் பெருந்திருவிழா நடைபெறுகிறது. நேற்று காலை கோயில் உள் பிரகாரத்தில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி – அம்பாள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் வேத மந்திரங்கள் … Read more

அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்.. சிசிடிவி பொருத்தப்படாததால் குழந்தையை மீட்பதில் சிரமம்..!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் குழந்தையின் தாயார் திவ்ய பாரதி உறங்கிய நேரம் பார்த்து மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றதாக உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர். மருத்துவமனை வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. Source link

முதல்வர் தலைமையில் சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு: 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

சென்னை: சென்னையில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இவற்றின் மூலம் ரூ.70 ஆயிரம் கோடிக்கு முதலீடு ஈர்க்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ என்ற பெயரில் அவ்வப்போது, முதலீட்டாளர்கள் மாநாட்டை அரசு நடத்தி வருகிறது. இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்குச் சென்று ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துவந்தார். திமுக அரசு அமைந்து … Read more

தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடாப் பகுதி, தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் … Read more