‘எதிரிக்கு எதிரி நண்பன்’: விராலிமலையில் ஓ.பி.எஸ்-க்கு கிடைத்த திடீர் ஆதரவு

தமிழக அதிமுகவில், ஒற்றை தலைமை கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒற்றைத் தலைமைக்கு தகுதியானவர் எடப்பாடி பழனிசாமியே எனச்சொல்லி தொண்டர்கள் மத்தியில் அமோக வரவேற்பு எழுந்துள்ளது. மறுபுறம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அதிமு வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக உள்ளார். அவருக்கு ஆதவராக சென்னையில் … Read more

#தமிழகம் || 100 முறை… ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு.!

சேலத்தில் 100 முறை ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலத்தில், 12 தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில், ஈரடுக்கு மேம்பாலத்தில் ஏறும் இடம், இறங்கும் இடம் ஆகிய பகுதிகளில் தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், அதிவேகமாக செல்பவர்களின் வாகன எண்ணை தானியங்கி காமிரா பதிவு செய்து, விதியை மீறியதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு SMS அனுப்பி வைக்கும். … Read more

அவள் பெயர் கமலா.. 8 கி.மீ சைக்கிள் மிதித்து தாத்தாவுக்கு சாப்பாடு.. வீடு தேடி வந்து ரூ.1 லட்சம் – விருது

தாய் தந்தையை கவனித்துக் கொள்வதையே சுமையாக கருதும் இந்த காலத்தில் தாத்தாவுக்கு தினமும் 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து சாப்பாடு கொடுத்து கவனித்துவரும் மாணவிக்கு மிஸ் இண்ஸ்பயர் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கபரிசு வழங்கப்பட்டுள்ளது… பெற்றெடுத்து… நன்கு படிக்க வைத்து…பாராட்டி சீராட்டி வளர்த்த தாய் தந்தையரையே கால ஓட்டத்தில் கை உதறி காப்பகங்களில் சேர்த்து விடும் பிள்ளைகள் பெருகி விட்ட இந்த காலத்தில் தான் தாத்தாவுக்காக தினமும் காலையும் மாலையும் சளைக்காமல் 8 … Read more

நிகழாண்டு குறுவை நெற்பயிருக்கு காப்பீடு எப்போது? – தமிழக அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சை: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி 50 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், நிகழாண்டில் குறுவை நெற்பயிருக்கான காப்பீடு குறித்த அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய பருவங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணைக்கு மே மாதம் இறுதியில் அதிகளவு … Read more

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் – உயிரை பணயம் வைத்து கணக்கெடுக்கும் வன ஊழியர்கள்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் முன்பருவ மழைக்காலத்திற்கான வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டு வருகின்றனர்.  தென்னந்தியாவின் புலிகளின் புகலிடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களிடையே யானைகள் இடம் பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளது. பவானிசாகர் வனப்பகுதியில் ஓடும் வற்றாத மாயாறும், நீர்நிலைகளும் யானைகளுக்கு நல்லதொரு சூழலை ஏற்படுத்தியுள்ளன. இவ்வனத்தில் உள்ள தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகள் குறித்த கணக்கெடுப்பு … Read more

வெளியேறிய இ.பி.எஸ்… உள்ளே வந்த ஓ.பி.எஸ்: திரௌபதி முர்மு ஆதரவு கேட்ட தலைவர்கள் யார், யார்?

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று தமிழகத்தில் அரசியல் கட்சியினரிடையே ஆதரவு திரட்டினார். இந்த விழாவில் ஒ.பி.எஸ். இ.பி.எஸ் இடையே மோதல் வெளிப்படையாக தெரிந்தது. இந்தியாவில் விரைவில் குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்காக இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு கோரி வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் … Read more

இந்த ஒரு விஷயத்துக்காகவே திரவுபதி முர்முவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு –  மனம் திறந்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

குடியரசுத் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள  தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  போட்டியிடும், பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர் திருமதி. திரவுபதி முர்மு இன்று சென்னை வந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும்,  நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி … Read more

ஆட்சேபணைச் சான்று வழங்க ரூ.3.30 லட்சம் லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய வி.ஏ.ஓ உமேஷ்..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆட்சேபணை சான்று வழங்க 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டனர். பனையூரைச் சேர்ந்த முனியசாமி என்பவர் அரசு இலவசமாக வழங்கிய பட்டா நிலத்தை விற்க ஆட்சேபணை சான்றுக்கு விண்ணப்பித்தார். 14 ஆண்டுகளுக்கு பின் விற்கலாம் என்ற அடிப்படையில் 2004ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிலத்தை, அவர் விற்க விண்ணப்பித்தார். இந்நிலையில், சான்றுக்காக லஞ்சம் கேட்கப்பட்டதை அடுத்து, முனியசாமி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாரளித்தார். … Read more

ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்: ஜெயக்குமார்

சென்னை: “ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி பாஜக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழச்சியில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அதிமுக முன்னாள் … Read more

தொழிலதிபரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் – 6 மணிநேரத்தில் மடக்கிய போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை புதுக்கோட்டை போலீசார் 6 மணி நேரத்தில் கைது செய்து கடத்தப்பட்ட தொழிலதிபரையும் மீட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(67). இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்ததாரராகவும் அப்பகுதியில் தொழிலதிபராகவும் உள்ளார். இன்று காலை 5 மணிக்கு இவர் வழக்கம்போல் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி … Read more