வெளியான அறிவிப்பு.. ஒன்று கூடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.  கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் … Read more

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு நாளை சென்னை வருகை.. அதிமுக உள்ளிட்ட கட்சியினரிடம் நேரில் ஆதரவு திரட்டுகிறார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு நாளை சென்னை வருகிறார். அ.தி.மு.க., தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கும் அவர், புதுச்சேரிக்கும் சென்று ஆதரவு திரட்ட உள்ளார். முன்னதாக எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரிடம் வாக்கு சேகரித்தார். Source link

உள்ளாட்சி இடைத் தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னம் இன்றி அதிமுக வேட்பாளர்கள் போட்டி

சென்னை: கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. 7 முறை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக தனது 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் நிலையில், ஒற்றைத் தலைமை கோஷமும், அதைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பல உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த அக்கட்சி, முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னம் இன்றி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, … Read more

மீண்டும் மிரட்டும் கொரோனா – பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்

அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள், புதிய மாணவர் சேர்க்கை, உயர்கல்வி பயில உள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் விநியோகம் உள்ளிட்ட பணிகள் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் … Read more

ரிசார்ட் அரசியல் முதல் ராஜினாமா வரை… மகாராஷ்டிராவை கிடுகிடுக்க வைத்த 10 திருப்பங்கள்!

மகாராஷ்டிராவில் சில வாரங்களாக நிலவிவரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வியாழக்கிழமை அழைப்பு விடுத்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. சிறிது நேரத்திலேயே, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் ரிசார்ட் அரசியல் முதல் ராஜினாமா வரை… மகாராஷ்டிராவை கிடுகிடுக்க வைத்த 10 திருப்பங்களை இங்கே பார்க்கலாம். ஃபேஸ்புக் வழியாக பொதுமக்களுக்கு உரையாற்றிய உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி … Read more

இது சரியில்லை… திரும்ப பெருங்கள்… தமிழக அரசை ஆளும் திமுக கூட்டணி கட்சியே வலியுறுத்தும் நிலைமை.!

ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமித்திட வேண்டும் என்று, தமிழக அரசுக்கு ஆளும் திமுகவின் கூட்டணி கட்சி சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது … Read more

தலையில்லா சடலத்தை எடுத்துச்சென்று நடனம் ஆடி அடக்கம் செய்த உறவினர்கள்..!

சென்னை ராயபுரத்தில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தலை கிடைக்காத நிலையில் மரபணு சோதனை செய்து 2 மாதங்களுக்கு பின்னர் தலையற்ற சடலத்தின் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.  சென்னை மணலி வினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்ரபாணி, திருவொற்றியூர் 7வார்டு திமுக வட்ட பிரதிநிதியாக இருந்து வந்த இவரை காதலி தமீம் பானுவும் , அவரது சகோதர் வாஷிம் பாஷாவும் சேர்ந்து கொலை செய்து உடல்பாகங்களை துண்டு துண்டாக்கியதாக கைது செய்யப்பட்டனர். அடையாறு … Read more

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி; பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு: ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம், முத்துமாரியம்மன் கோயில் தெரு, அம்மா உணவகம் எதிரே கழிவுநீர் கால்வாயில் கடந்த செவ்வாய் அன்று (28-ம் தேதி) அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பை சரி செய்யும் பணியில் தஞ்சாவூரைச் சேர்ந்த நெல்சன் (26), அதே மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (36) ஈடுபட்டனர். அப்போது பாதாள சாக்கடை குழியில் விழுந்து இருவரும் … Read more