முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது: ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆலோசித்து முடிவு
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது. இதில், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல், ஆன்லைன் ரம்மிதடைக்கான அவசரச் சட்டம் கொண்டுவருதல், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டம் கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசின் தடை சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் … Read more