கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு வழக்கு

சென்னை: கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2020ஆம் ஆண்டு நபார்டு வங்கி நிதியுதவி மூலம் 933 கோடியே 10 லட்ச ரூபாயை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஆறு கட்டங்களாக … Read more

சிக்கிய கவர்னர்.. சீறும் தாக்கரே.. எஸ்கேப் ஷிண்டே!

மும்பை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு மராட்டி கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி மன்னிப்பு கோர வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.இந்த விவகாரத்தில் நாசுக்காக ஒதுங்கிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஷிண்டே அளித்த பேட்டியில், “கவர்னர் கோஷ்யாரியின் கருத்தில் உடன்பாடு இல்லை. அவரின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். மராத்திய மக்களின் கடும் உழைப்பால் மும்பை … Read more

போதைப் பொருட்களுக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்: தி.மலையில் போக்குவரத்து பாதிப்பு – மக்கள் அதிருப்தி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக நடத்திய ஆர்ப்பாட்டம் எதிரொலியாக ரயில்வே மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டன. இதன் எதிரொலியாக, காணொலி காட்சி வாயிலாக, ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் … Read more

SBI Whats App Banking: எஸ்.பி.ஐ அசத்தல் முயற்சி; வாட்ஸ் அப்-பிலேயே இந்த வேலை முடிஞ்சிரும்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) வாட்ஸ்அப் பேங்கிங் (WhatsApp banking) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையை பெறுவதன் மூலம் சேமிப்புக் கணக்கின் இருப்பை அறிந்து கொள்ளுதல் மற்றும் மினி நிதிநிலை அறிக்கை பெறுதல் என பல்வேறு வசதிகளை பெறமுடியும்.இந்தச் சேவையை பெறுவது குறித்து பார்க்கலாம். 1) பதிவு செய்தல்இந்த சேவையை பெற பதிவு செய்தல் அவசியமாகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து WAREG என டைப் … Read more

ராக்கெட்ரி பட நிஜ ஹீரோவை சந்தித்த சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் புகைப்படம்.!

இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் என் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ராக்கெட்ரி நம்பி விளைவு. இந்த திரைப்படத்தை பிரபல நடிகர் மாதவன் நடித்து இயக்கி யுள்ளார். இந்த திரைப்படம் மாதவன் இயக்கிய முதல் திரைப்படமாகும். இயக்குனராக அவதாரம் எடுத்த முதல் திரைப் படத்திலேயே மிகவும் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். பொறுப்புடன் அவர் இந்தப் படத்தில் பணியாற்றி இருப்பதை படம் பார்க்கும் அனைவருமே உணர முடியும். படம் வெளியாகி அனைவரிடமும் நல்ல … Read more

கவுன்சிலர்களின் கள ஆய்வுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும்: சென்னை மேயர் பிரியா உத்தரவு

சென்னை: கவுன்சிலர்களின் கள ஆய்வுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், வார்டு பிரச்சினைகளையும் மேயர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட கவுன்சிலர் ரேணுகா, “ஆய்வுகளின்போது வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து உரிய தகவல்களை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் … Read more

சேலம் அம்பலவான சுவாமி கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: 2 மாதங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டம் குகையில் உள்ள அம்பலவான சுவாமி கோயிலின் கல் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 2 மாதங்களில் தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சேலம் மாவட்டம் குகை பகுதியில் உள்ள அம்பலவான சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கல் மண்டபம், கோயில் திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களின்போதும் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், இந்த … Read more

“வினை விதைத்தவர்கள் வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது” – மதுரையில் தினகரன் பேச்சு

மதுரை: “வினை விதைத்தவர்கள் வினை அறுக்கும் காலம் வந்துவிட்டது” என்று அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் பேசினார். மதுரையில் இன்று அமமுக கட்சியின் சார்பில் மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக நிறுவனத் தலைவர் டிடிவி.தினகரன் பேசியது: “கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி, ஒசூர் வரைக்கும் 234 தொகுதியிலும் அமமுகவுக்கு கட்டமைப்பு உருவாக்கியுள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப்பதவியை ஏலம்போட்டு நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். அம்மாவால் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தவர்கள் … Read more

மக்களுக்கு தேவையானதை முன்கூட்டியே அறிந்து செயல்படுபவர் மோடி- நிர்மலா புகழாரம்.!

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.  சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ” பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த பல்வேறு நாடுகள் கூட தற்போது பின்தங்கி விட்டன. இப்படிப்பட்ட நிலையில், உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா … Read more

“மின் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பெருமிதம்

புதுச்சேரி: “மின் துறையில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்” என புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த மின் சக்தி திருவிழா நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியது: ‘‘அனைத்து துறைகளிலும் நம்முடைய நாடு தன்னிறைவு பெற்று தலைசிறந்த நாடாக விளங்க வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம். புதுச்சேரி மின் துறையின் வளர்ச்சியை எண்ணிப் … Read more