தமிழ்நாட்டில் இன்று 1,472 பேருக்கு புதிதாக கொரோனா : சென்னையில் 624 பேருக்கு தொற்று

 தமிழ்நாட்டில் இன்று 1,472 பேருக்கு புதிதாக கொரோனா சென்னையில் 624 பேருக்கு கொரோனா தொற்று முகக்கவசம் கட்டாயம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களின் நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது அவசியம் – சுகாதாரத்துறை தமிழ்நாட்டில் இன்று 1,472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது – சுகாதாரத்துறை … Read more

'சனாதனமும் மதமும் வேறு வேறு' – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: சனாதனமும் மதமும் வேறு வேறு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி” அறிவியல் வளர்ச்சி,தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்கள் கையில் மிக பெரிய சக்தியை வழங்கியுள்ளது. அது மிக பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த உலகத்தை பல முறை அழிக்கக் கூடிய சக்தி பல … Read more

சன் டி.வி ரசிகர்கள் ஷாக்… ரோஜா சீரியல் முக்கிய பிரபலம் திடீர் விலகல்!

பொழுதுபோக்கு டிவின் சேனல்கள் பார்வையாளர்களை ஈர்க்க சீரியல்களையே நம்பி இருக்கின்றன. சன் டிவி தொடங்கியதில் இருந்து அதனுடைய பலம் சீரியல்கள்தான். போட்டியாக பல டிவி சேனல்கள் வந்துவிட்டாலும் சன் டிவியின் ஏதாவது ஒரு சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும். அந்த வகையில், பல மாதங்களாக சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது ரோஜா சீரியல். சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும்‘ரோஜா’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. 2018 … Read more

அதிமுக ஒற்றை தலைமை… முதல்முறையாக டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி.!

கடந்த 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என்ற விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அன்றுமுதல் பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்புகள் இரு அணிகளாக பிரிந்தது வெட்ட வெளிச்சமானது. இதில், ஓபிஎஸ் தரப்பை பொறுத்தவரை இரட்டை தலைமை தான் சிறந்தது என்று போர்க்கொடி தூக்க, எடப்பாடி பழனிசாமி தரப்போ ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று வருகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் … Read more

சென்னை | பருவமழை முன்னெச்சரிக்கை பணி: 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்

சென்னை: சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியான அலுவலர்களை நியமனம் செய்யப்படுவார்கள். இதன்படி இந்தாண்டு சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக தமிழக அரசு … Read more

நைட் முழுக்க போனில் பேசிய இளம்பெண்; காலையில் ரூம் மேட்டிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

சென்னையை அடுத்த மதுரவாயலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் செல்போனை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் நிஷா(21). இவர் சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நிஷாவுடன் பணிபுரியும் லோகேஸ்வரி என்பரும் சேர்ந்து மதுரவாயல் லட்சுமி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று … Read more

அ.தி.மு.க பிளவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பி.எஸ்: ஆர்.பி உதயகுமார் காட்டம்

அ.தி.மு.க பிளவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பி.எஸ் என்று மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், கடந்த 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பாதிலேயே ஓபிஎஸ் வெளியேறினார். அவருக்கு மூத்த தலைவர்கள் யாருமே சரியாக மதிப்பளிக்கவில்லை. மேலும் அவர் மீது பாட்டில் வீசி எறியபட்டது. இந்நிலையில் அவர் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தார் தொடர்ந்து அவர் டெல்லிக்கு பயணித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக … Read more

வருங்காலங்களில் ஆசிரியர்களை தமிழக அரசு கைவிட்டு விடுமோ என்று பயமா இருக்கு – அரசு ஆசிரியர்கள்.!

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “1990 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். 1990-ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கிட உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது.  அதே போன்று 2004-ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் பெரியார் திடலில் மாநில அளவிலான … Read more

புதுச்சேரி | நீதிமன்ற கட்டணம் இல்லாமல் மக்கள் நீதிமன்றத்தில் விரைவாக நீதி: உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா தகவல்

புதுச்சேரி: நீதிமன்ற கட்டணம் இல்லாமல் மக்கள் நீதிமன்றத்தில் விரைவாக நீதி கிடைக்கும். இத்தீர்ப்பானது மேல்முறையீட்டுக்கு எடுக்கப்படாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா தெரிவித்தார். புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாஹே, ஏனாம் நீதிமன்ற வளாகங்களில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. மக்கள் நீதிமன்றத்தை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் ராஜா புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி வைத்தார். … Read more

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் பெயரில்லாமல் வெளியான அதிமுக நிர்வாகிகள் கூட்ட அறிவிப்பு! ஆனால்..?

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பெயரில்லாமல் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது வகித்து வரும் பொறுப்பை குறிப்பிட்டு அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாளை 27ம் தேதி அதிமுக அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியில் இருந்து அறிவிப்பு வெளியாகி … Read more