சவால் விட்ட சர்க்கஸ் கலைஞர்.. சாதித்த குமரி மண்ணின் மைந்தர்..!

நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்கா கலைஞர் சவாலை ஏற்று களம் இறங்கிய நாகர்கோவில் இளைஞர் ஒருவர் 80 கிலோ எடையை ஒற்றை கையால் தலைக்கு மேல் தூக்கி சாகசம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த சில தினங்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு கலைஞரான ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் 80 கிலோ எடை கொண்ட பெரிய … Read more

ஒரு நாடு ஒரு டயாலிசிஸ் திட்டம்: மத்திய சுகாதார துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: “ஒரு நாடு ஒரு டயாலிசிஸ் திட்டம்” விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா தெரிவித்தார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா. இதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு … Read more

மதமும் சனாதானமும் வேறு வேறு – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

மதமும், சனாதானமும் வேறு வேறு என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்கள் கையில் மிகப்பெரிய சக்தியை வழங்கியுள்ளது. அதே சமயத்தில், அது மிகப்பெரிய ஆபத்தையும் கொடுத்திருக்கிறது. இந்த உலகத்தை அழிக்கக்கூடிய சக்தி பல நாடுகளிடம் இருக்கிறது. எனவே தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த … Read more

ஜூலை 11-ல் அ.தி.மு.க பொதுக் குழு நடக்காது: வைத்திலிங்கம் உறுதி

Vaithilingam ensures ADMK general council meeting won’t happen at July 11: வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மீண்டும் நடைபெறும் என இ.பி.எஸ் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், நிச்சயம் பொதுக்குழு நடைபெறாது என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். கடந்த ஜுன் 23 ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம், ஒற்றைத் தலைமை விவகாரத்தால் தீர்மானங்கள் எதுமின்றி சலசலப்புடன் நிறைவடைந்தது. பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக இ.பி.எஸ் வரவேண்டும் … Read more

BREAKING : ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்.!

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்த பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாது … Read more

“எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக தலைமைப் பதவிக்குச் சரியானவர்” – உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன உறுதி இல்லை என்றும், மன உறுதியோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக தலைமைப் பதவிக்குச் சரியானவர் என்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார் எனத் தெரிவித்தார்.  Source link

'ஈபிஎஸ் தான் அதிமுக தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்' – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை

மதுரை: ஈபிஎஸ் தான் அதிமுக தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்று தெரிவித்தார். மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”அதிமுகவின் நிரந்தர எதிரியான திமுகவை எதிர்க்க ஒற்றைத் தலைமையான எடப்பாடி இருந்தால் தான் அதை செய்ய முடியும், திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவினரின் ரத்தத்தில் ஊறியது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய ஓபிஎஸ், ‘பராசக்தி வசனத்தை … Read more

பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் அனுப்பப்படுகிறதா? – இஸ்ரோ விஞ்ஞானி விளக்கம்

Mayilsamy Annadurai explains Madhavan speech about Panjangam: இஸ்ரோ பஞ்சாங்கம் பார்த்து செவ்வாய் கோளுக்கு ராக்கெட் அனுப்பியதாக நடிகர் மாதவன் கூறியது சர்ச்சையான நிலையில், முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ, செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருவதோடு, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யவும் செயற்கைகோள்களை அனுப்பி வருகிறது. இந்தநிலையில், இஸ்ரோ-வில் பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறு ராக்கெட்ரி என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. … Read more

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு.. காவல்நிலையத்தின் முன் பெண் தற்கொலை முயற்சி..!

புகார் மீது நடவடிக்கை எடுக்கததால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கொளத்தூரை சேர்ந்தவர் வத்சலா. இவர் தனது மகன் மருமகளுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர்களான கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் வத்சலா வீட்டின் அசல் பத்திரங்களை வாங்கி அதனை வைத்து போலி பத்திரம் தயாரித்தனர். அதனை வைத்து வங்கியில் 1 கோடி கடன் பெற்றதாக தெரிகிறது. தற்போது வட்டியும், அசலுமாக ரூ.1 கோடியே 30 லட்சம் வந்ததால் கடன் … Read more

பழனிசாமியை கண்டித்து ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுக்குழு கூட்டத் தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு எதிராகவும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர். திருப்புல்லாணி அருகே ஆண்டித்தேவன்வலசை கிராமத்தில் அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் உடையத்தேவன் தலைமையில் துணைச் செய லாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. … Read more