அக்னி பாதைக்கு ஜூன் 27-ல் காங். மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: சேலத்தில் கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: ”தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து வரும் 27-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசின் அக்னிபாதை திட்டம் நாடு முழுவதும் இளைஞர்களிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இந்த திட்டம் எதிர்கால இளைஞர்களுக்கு எதிரான திட்டமாகும் … Read more

சென்னை கேகே நகரில் மரம் விழுந்து பெண் வங்கி மேலாளர் பலி

சென்னை கேகே நகரில் மரம் விழுந்ததில் வங்கி மேலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கேகே நகரில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு அருகில் இருந்த பெரிய மரம் கீழே விழுந்திருக்கிறது. அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த கார் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் காரில் பயணம் செய்த வங்கி மேலாளர் வாணி கபிலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். மேலும் காரில் அவருடன் பயணம் செய்த அவரது … Read more

இணைய அடிமைகளாக மாணவர்கள்; மாற்றுத் திட்டம் என்ன? திருச்சி பேராசிரியர் விளக்கம்

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிலம்ப கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் சிலம்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒலிம்பிக் தினமான ஜூன் 23 அன்று விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்திற்கான நாளாக கொண்டாடப்படுகிறது., இதில் விளையாட்டுடன் தொடர்புடையவர்கள் வெகுஜன விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் பயிற்சி செய்யவும் ஒன்று கூடுகின்றனர். மக்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த அனுமதிக்கும் பரந்த அளவிலான விளையாட்டு, கலாச்சார மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான ஆதரவையும் … Read more

ESIC ஆட்சேர்ப்பு : மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம்.! எழுத்து தேர்வு இல்லை – நேர்காணல் மட்டுமே.. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.! 

ESIC ஆட்சேர்ப்பு 2022 அவுட் எம்ப்ளாய்ஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Employees State Insurance Corporation- ESIC) மூத்த குடியுரிமை மற்றும் முழு நேர/பகுதி நேர நிபுணர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  மொத்தம் 26 காலியிடங்கள் உள்ளன. நேர்முகத் தேர்வு 11.07.2022 அன்று நடைபெறும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தேதியின்படி நேர்காணலில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் தேதியில் 67 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியல் இன பிரிவினருக்கு விதிகளின்படி தளர்வு. தகுதி/படிப்பு … Read more

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம்.. 4 பேரை தேடி வரும் காவல்துறை!

நெல்லை மாவட்டத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக புகாரில் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திசையன்விளை அருகே இட்டமொழியில் தன்னை ஐந்து பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், நாகலிங்கம் என்ற இளைஞரை கைது செய்து, வழக்கில் தொடர்புடைய 3 சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில், … Read more

இளைஞர்கள் கையில் திருச்சி: பல்துறை நிபுணர்களின் கூட்டு முயற்சியால் மாற்றங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட எஸ்.பி, காவல் துணை ஆணையர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் என 40 வயதுக்குட்பட்டோர் திருச்சி மாவட்ட நிர்வாகத்தை அலங்கரிக்கின்றனர். அரசு நிர்வாகத்தில் மாநில, மாவட்ட அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பெரும்பாலும் அனுபவம் நிறைந்தவர்களே பணியில் இருப்பர். ஒரு சில மாவட்டங்களில், ஒரு சில பணியிடங்களில் மட்டுமே இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படியான சூழலில் தற்போது, திருச்சி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான முக்கிய நிர்வாக பதவிகளுக்கு இளைஞர்கள் … Read more

அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் சில்மிஷம் – தேனியில் 3 முன்னாள் ராணுவ வீரர்கள் கைது

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் மதுபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த மூன்று முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதை ஆசாமிகள் தாக்கியதில் வனக்காவலர் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். காயமடைந்த வனக்காவலர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், தேனியை பாலமுருகன், அருப்புக்கோட்டையை சேர்ந்தவ கந்தசாமி உள்ளிட்ட மூவரும் முன்னாள் ராணுவத்தினர். மேலும் இவர்களது நண்பரான ஏழுமலையைச் … Read more

மரியாதையாக அனுப்பி வைக்கிறோம்… சென்று விடுங்கள்’: ஓ.பி.எஸ்-க்கு அ.தி.மு.க ‘ஐ.டி விங்’ பகிரங்க எச்சரிக்கை

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஒருபக்கம் சூடுபிடித்து சற்று அடங்கியுள்ள நிலையில், தற்போது ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்றும் முயற்சி நடைபெற்று வருவது அதிமுகவின் ஐடி விங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு உறுதி செய்துள்ளது. முன்னாள் ஜெயலலிதா இறப்புக்கு பின் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும். எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பளராகவும் பதவி ஏற்றனர். ஆனாலும் கட்சியில் முதல்வமைச்சர், எதிர்கட்சி தலைவர் போன்ற முக்கிய பதவிகளை தன்னிடம் வைத்து்ககொண்ட எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் … Read more

#BREAKING || முழுஆதரவை தெரிவித்த ஓபிஎஸ்., டெல்லியில் இருந்து வெளியான அதிகாரபூர்வமாக அறிவிப்பு.!

பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திரௌபதி முர்முக்கு அதிமுகவின் முழு ஆதரவு என்று அறிவித்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.  குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று … Read more

வாழைப் பழத்தையும் நிம்மதியா சாப்பிட விடமாட்டீகளாடா..! பகிரங்கமாக எத்திலீன் கலவை தெளிப்பு

வாழைப் பழத்தில் எத்திலின் ரசாயண கலவை தெளிக்கப்படுவதை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரிடம் சவால் விட்ட வியாபாரியின் வீடியோ வெளியாகி உள்ளது. புதுச்சேரி பாரதியார் வீதியில் உள்ள வாழைத்தார் மண்டியின் முன்பு விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களின் மீது இளம் வியாபாரி ஒருவர் வீதியில் வைத்தே பகிரங்கமாக எத்திலீன் ரசாயன கலவையை தெளித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர், தம்பி வேகமாக பழத்தை பழுக்க வைக்க இந்த ரசாயனத்தை வாழைத்தார் மீது தெளிக்கிறியே, சின்ன பசங்க … Read more