இரவு வரை நீடித்த அமலாக்கத்துறை விசாரணை!கட்சி தலைமை மீது வருத்தத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி?

கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி ஜாபர்சேட்டுக்கு வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அப்போதைய வீட்டு வசதி வாரிய அமைச்சரும், தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் நேற்று முன் தினம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. வழக்கின் பின்னணி: கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரியாக திகழ்ந்தவர் ஜாபர் சேட். இவர் தமிழக … Read more

அதிமுக பிரச்சினை; ஒபிஎஸ், சென்னை உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவு

அதிமுக பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் ஏதேனும் விதி மீறல் நடந்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனத் தெரிவித்தது.இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு மனுவில், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகள் காற்றில் … Read more

“உங்களுக்கு எனது வாழ்த்துகள், எஞ்ஜாய்” – அண்ணா பல்கலை., மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பிரதமர்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இடநெருக்கடி காரணமாக வேறு இடங்களில் அமரவைக்கப்பட்ட மாணவர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விழாவில் பேசிய பிரதமர், “இந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூட பங்கேற்றிருக்கிறார். இந்த … Read more

முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை -தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்த விதிகளை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி, கொரோனா சிகிச்சைப் பணியில் முன்கள பணியாளராக ஈடுபட்டார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் கொரோனா பாதித்து உயிரிழந்தார்.   கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், 50 … Read more

"விரைவு விசாரணையில் நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் முதலிடம்” – தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பெருமிதம்

மதுரை: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது என தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பாண்டாரி கூறினார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் 18-வது ஆண்டு விழா மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் (எம்எம்பிஏ) 17-வது ஆண்டு விழா ஆகியன உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. இதையொட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, உயர் நீதிமன்ற கிளை நிர்வாக … Read more

கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை!

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மீட்டர்கேஜ் பாதைகளை அகல ரயில்பதையாக மாற்றியும் கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே துறை சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. கீழே உள்ள வீடியோவில் நாம் பார்க்கும் காட்சி பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் அங்கும் இங்குமாக நள்ளிரவிலும் அலைபோதும் காட்சிகள் .. இந்த காட்சிகள் அரங்கேறும் இடம் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம், தென்மாவட்ட பேருந்துகள் பெரும்பாலும் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல … Read more

‘ராஷ்டிரபத்தினி’ சர்ச்சை: குடியரசுத் தலைவரை எப்படி அழைக்க வேண்டும்?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ‘ராஷ்டிரபத்தினி’ என்று குறிப்பிட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சி அவரை அவமானப்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு திட்டத்தில், ராஷ்டிரபதி மற்றும் சபாபதி (சபாநாயகர்) போன்ற வார்த்தைகள் இரு பாலினத்தவருக்கும் பொதுவான வார்த்தைகள். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என்று குறிப்பிட்ட காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வியாழக்கிழமை (ஜூலை 28) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சலசலப்பு … Read more

செஸ் ஒலிம்பியாட் | இரண்டு அரங்குகளில் 177 அணிகள் இடையே போட்டி தொடங்கியது: அமைச்சர் மெய்யநாதன்

செங்கல்பட்டு: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் தொடங்கியது. இரண்டு அரங்குகளில் நடைபெற்று வரும் போட்டியில் 177 அணிகள் பங்கேற்றுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கியது. இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவு. இன்று மாலை 3 மணிக்கு அந்த போட்டிகள் தொடங்கியிருப்பது மட்டற்ற … Read more

சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறை: தமிழ்நாடு அரசுடன் இணைகிறது சென்னை ஐஐடி

சென்னை: சென்னை ஐஐடியின் ஆர்.பி.ஜி. ஆய்வகத்தால் அமைக்கப்பட்ட சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம், ‘வடிவமைப்பு சிந்தனை’ அணுகுமுறை ஒன்றை உருவாக்கி உள்ளது. இதனை சாலைப் பாதுகாப்பு தொடர்புடைய தமிழக அரசின் துறைகள் குறிப்பாக காவல்துறை அமல்படுத்த உள்ளது. சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி) தமிழக அரசுடன் இணைந்து செயல்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழு மற்றும் சென்னை ஐஐடி -ன் … Read more

அதிகரிக்கும் மனிதன் – புலி மோதல்கள்! தடுப்பது எப்படி? சர்வதேச புலிகள் தின சிறப்பு பகிர்வு!

நாட்டிலேயே அதிக புலிகள் வாழும் பகுதி என்ற பெருமையை முதுமலை, பந்திப்பூர், நாகர்ஹோலே மற்றும் முத்தங்கா வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி வனப்பகுதி பெற்றுள்ள போதிலும், சமீபகாலமாக இந்த பகுதிகளில் மனித – புலி மோதல்கள் அதிகரித்து வருவது வன உயிரின ஆர்வலர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மோதல் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? எதிர்காலத்தில் அதனை எவ்வாறு தவிர்ப்பது? என்பது குறித்து சர்வதேச புலிகள் தினமான இன்று இந்த தொகுப்பில் பார்ப்போம். அதிக புலிகள் வாழும் நீலகிரி … Read more