பிரியா.. பூமி.. வாலு பசங்க.. விஜே மணிமேகலை வில்லேஜ் டைம்ஸ்!

சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை, கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார். பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி ஆன மணிமேகலை’ கலக்க போவது யாரு … Read more

#BREAKING || சரவணா கோல்டு பேலஸ், லாட்டரி மார்டினின் சொத்துக்கள் முடக்கம்.!

லாட்டரி மார்டினின் ₹173 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சோத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும், சென்னையில் சரவணா கோல்ட் பேலஸ் கடைக்கு சொந்தமான 234.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் லாட்டரி விற்பனையாளர் மார்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.  லாட்டரி எஸ் மார்டினுக்கு தமிழ்நாட்டில் உள்ள நிலங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு … Read more

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.!

தமிழகத்தில் 11 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 3, 4, 5, 6 ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜூலை 5, 6 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 11  மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று (ஜூலை 2) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, … Read more

'வேலையின்றி மன உளைச்சல்' – 24 வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை

வேலையில்லாமல் வீட்டில் இருந்த பெண் 24-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் அடுத்த ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அல்போன்ஸா என்பவரின் மகள் ஜெனிபர் (35). இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்த ஜெனிபர் 24-வது … Read more

புதிய முடி வளர்ச்சிக்கு நெல்லி ஹேர் ஆயில்.. இப்படி யூஸ் பண்ணுங்க!

நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவது முதல் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது வரை பல வழிகளில் முடிக்கு நன்மை பயக்கிறது. நெல்லியில், வைட்டமின் சி மற்றும் டானின்கள் நிறைந்துள்ளன. இதன் ஊட்டமளிக்கும் பண்புகள் கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக்கி, கூடுதல் மென்மையான அமைப்பைக் கொடுக்கும். நெல்லிக்காயை உணவில் வழக்கமான பகுதியாகச் சேர்த்த பிறகு, முடி அமைப்பில் தெரியும் மாற்றத்தை ஒருவர் அனுபவிக்க முடியும். தாதுக்கள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் … Read more

#BREAKING : தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, … Read more

சிட்கோ நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாலையில் தீவிபத்து.!

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெயிண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விற்கப்படும் அந்நிறுவனத்தில் பெயிண்ட் கலவைக்கு பயன்படுத்தும் கெமிக்கல் பேரல்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் வெடித்துள்ளது. தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவி கரும்புகை சூழ்ந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணிநேரம் போராடி தீயை … Read more

விராலிமலையில் ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக அணி சேர்ப்பா?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் விஜயபாஸ்ர் எம்எல்ஏ-வுக்கு எதிராக அக்கட்சிக்குள் அணி சேர்க்கை நடைபெறுகிறதா என அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக உள்ளார். அவருக்கு ஆதவராக சென்னையில் கட்சிக் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நகராட்சி முன்னாள் தலைவர் … Read more

'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' – புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறி தொடர்புகொண்டு பேசுபவர்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டுமென சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. சமீப காலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டின் மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாத பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் உடனே மின்வாரிய அதிகாரியை … Read more