நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் – அற்புதம்மாள் பேட்டி

மே 18-க்கு பிறகு சிறைவாசிகளின் நிலை மாறியுள்ளதாகவும், நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் எனவும், இரண்டொரு மாதத்தில் அரசு இதனை கவனிக்கும் எனவும் பேரறிவாளனின் தாயார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையாகி சென்ற நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் … Read more

ஓபனராக வந்த தீபக் ஹூடா… அப்போ ரிது ராஜ் இனி அவ்வளவுதானா?

Ruturaj Gaikwad – Deepak Hooda Tamil News: அயர்லாந்து மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இளம் படையை கொண்ட இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த அணியை ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ரிஷப் பண்ட், மிடில் -ஆடர் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இணைந்துள்ளனர். … Read more

கன்னியாகுமாரி.! பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் உதியார்விளை பகுதியை சேர்ந்த இளைஞர் உறவுக்கார சிறுமியுடன் திங்கள்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சாலையின் வளைவான பகுதியில் முன்னாள் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் … Read more

தொலைதூரக் கல்வி, திறந்தவெளி பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறும் திட்டம் பொருந்தாது – தமிழக அரசு

தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் திட்டம் பொருந்தாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. குழந்தை திருமணத்தை தடுப்பது, கல்வி இடைநிற்றலை குறைப்பது போன்ற நோக்கங்களுக்காக உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு அத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதற்கான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவிகள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் உயர்கல்வி பயிலவேண்டும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. Source … Read more

சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக குறை தீர்வு கூட்டம் நடத்த ஆலோசனை

சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக குறைதீர்வு கூட்டங்களை நடத்த மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம், துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர், ‘‘சென்னை மாநகராட்சி, குடிநீர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உள்ளிட்ட பல்துறை அடங்கிய ஒருங்கிணைந்த குழுவை ஏற்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, மாநகராட்சி வளர்ச்சியை மேம்படுத்த முடியும்,’’ என்று தெரிவித்தனர். இதற்கு பதலளித்த மேயர், ‘முதல்வரிடம் … Read more

ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது – கார்த்தி சிதம்பரம்

ஆண்டிப்பட்டியில் பாஜக தொண்டர் காவி சால்வை அணிவித்ததை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டது, மறைமுகமாக இருந்த பாஜக சாயம் வெளுத்து விட்டது என அர்த்தம் என காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகே அக்னிபாத் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார். அவரிடம், ஆண்டிப்பட்டியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்த பாஜக தொண்டர் அவருக்கு காவி நிற சால்வை அணிவித்தது … Read more

பிரபல சீரியலில் பிக் பாஸ் ஜூலி: என்ன ரோல் தெரியுமா?

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி மன்னர் வகையாறா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில். தற்போது அவர் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணி சேனல்களிலர் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தவமாய் தவமிருந்து. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டது. வேலையில் இருந்து ஓய்வு பெற்ற மார்க்கண்டேயன் – சீதா என்ற தம்பதி தங்களது பிள்ளைகளிடம் இருந்து எதிர்கொள்ளும் சிரமங்களை … Read more

குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு.!

மதுரையில் குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் கணேசன் (71). இவர் நேற்று மதியம் குளிக்க சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி குளத்துக்குள் தவறி விழுந்து தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து மகள் மீனாம்பாள் கொடுத்த … Read more

ஜூலை 18ஆம் தேதி முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் – அமைச்சர் பொன்முடி

ஜூலை 18ஆம் தேதி முதல் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், +2வில் Vocational Course படித்தவர்கள் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  Source link

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் கரோனா மீண்டும் வேகமெடுப்பதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு 2 … Read more