சோனியா காந்திக்கு கொரோனா உறுதி… அமலாக்கத்துறை முன் ஆஜராவாரா?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். ரந்தீப் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ” காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் தலைவர்களையும், சமூக ஆர்வலர்களையும் சந்தித்து பேசினார். அவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை சோனியா காந்திக்கு லேசான காய்ச்சலும், கொரோனா அறிகுறிகளும் தென்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி … Read more

திரையுலகின் முடிசூடா மன்னன் 'இசைஞானி" இளையராஜா பிறந்த தினம்.!!

இளையராஜா : திரையுலகின் முடிசூடா மன்னன் ‘இசைஞானி” இளையராஜா 1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராசய்யா. இவர் 26வது வயதில் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார். பிறகு ‘அன்னக்கிளி” திரைப்படம் மூலம் 1976ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருக்கு ‘இளையராஜா” என்ற பெயரை படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தான் சூட்டினார். இதை தொடர்ந்து ‘பதினாறு வயதினிலே”, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு” ஆகிய திரைப்படங்களில் இவரது … Read more

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் சேலம், நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில், அடுத்த 48 மணி … Read more

சமத்துவம், தேர்வு முறை சீர்திருத்தம்… – மாநிலக் கல்விக் கொள்கைக்கு 10 வழிகாட்டுதல்கள் – அரசாணை வெளியீடு

சென்னை: அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திமுக கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லி உயர் … Read more

`பாஜகவின் வளர்ச்சி தி.மு.க.வுக்குதான் சரிவை ஏற்படுத்தும்!'- வாசகர்களின் கமெண்ட்ஸ்

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 1-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல – பொன்னையன்… அதிமுகவை பின்னுக்குத் தள்ளுகிறதா பாஜக?’ எனக் … Read more

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ எதிர்ப்பு – தீர்ப்பை தள்ளிவைத்த நீதிமன்றம்

திருவண்ணாமலையில் கிரிவலம் பாதையை ஒட்டிய தனியாருக்குச் சொந்தமான இடத்தில், அமைச்சர் எ.வ.வேலு நிறுவிய தனியார் அறக்கட்டளையால் நிறுவப்படும் கருணாநிதி சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய அமர்வு, நிலம் தனியாருக்குச் சொந்தமாக இருக்கும் பட்சத்தில், மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்கிற கேள்வியை முன்வைத்தது. சிலை அமைக்கும் நிலம் தனியார் பட்டா இடம் என்பதற்கான ஆவணத்தை மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்ததை … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புரட்டி எடுக்க போகும் கனமழை.!!

தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 03.06.2022, 04.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது … Read more

மணமகனுக்கு மணமகள் போட்ட 10 கட்டளைகள் – கவனத்தை ஈர்த்த திருமண பேனர்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, மணமகனுக்கு மணமகள் 10 கட்டளைகள் விதித்து வைக்கப்பட்டுள்ள திருமண பேனர் வைத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ்க்கும் – கரைசுத்துபுதூரை சேர்ந்த சுவாதி அனுஷியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண வரவேற்பு விழாவுக்காக  நண்பர்கள் சார்பில் பல்வேறு பேனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மணமகள் கட்டளையிடுவது போல் வைக்கப்பட்டிருந்த பேனரை அனைவரும் பார்த்து சென்றனர்.   Source link

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் தென்காசி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் … Read more

ராமநாதபுரம்: கலர் மீன்கள் வரத்து அதிகரித்தும் விலை குறைவால் மீனவர்கள் கவலை

பாம்பனில் கலர் மீன்கள் வரத்து அதிகரித்தும் விலை குறைவாக விற்பனை ஆவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதனால் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் தங்களுடைய படகுகளை கரை சேர்த்து பழுது பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக கடல் சீற்றம் போன்ற காரணங்களால் … Read more