டிஎன்பிஎஸ்சி தற்காலிக தலைவராக முன்னாள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

டிஎன்பிஎஸ்சி தற்காலிக தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி . தலைவராக இருந்த க.பாலச்சந்திரன், வயது அடிப்படையில் கடந்த 9-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். அதனைத்தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி .) பொறுப்பு தலைவராக, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வாணைய உறுப்பினராக முனியநாதன் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது பொறுப்பு தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த சி.முனியநாதன்  2010 … Read more

சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!

நாமக்கல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியபோது சுற்றுலா வேன் மோதி 2 போலீசார் பலி காவலர்கள் இருவரின் குடும்பங்களில், தலா ஒருவருக்கு, கருணை அடிப்படையில், அரசு பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் – … Read more

சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: ஓபிஎஸ் பட்டியலிட்டு விளக்கம்

சென்னை: “சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது; ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது; ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லல் அவதியை எடுத்துக்காட்டுவது; … Read more

நாமக்கல் : போக்குவரத்தை சரி செய்த போலீசார் மீது வேன் மோதி விபத்து‌‌.. காவலர் 2 பேர் பலி.!

ராசிபுரம் அருகே போக்குவரத்தை சரி செய்த போலீசார் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை அடுத்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் புதுசத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், இராசிபுரம் காவல் நிலைய தலைமை காவலர் தேவராஜன் … Read more

இந்தியாவில் ஆன்மிக வளர்ச்சியும் அவசியம் – ‘ஹரிவராசனம்’ நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு ஆளுநர் ரவி கருத்து

சென்னை: வேற்றுமையில் ஒற்றுமை என நமது இந்திய அரசியலமைப்பு வலியுறுத்துவதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதார வளர்ச்சிபோல, ஆன்மிகத்தின் வளர்ச்சியும் அவசியம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை சாத்தும்போது பாடப்படும் பிரசித்தி பெற்ற ‘ஹரிவராசனம்’ பாடல் இயற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா குழு அறிவிப்பு கூட்டம் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஹரிவராசனம் … Read more

Tamil news today live : அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி – ஓ.பன்னீர்செல்வம்

Go to Live Updates Tamil Nadu news today live updates : தங்கம் விலை ஒரு கிராம் 24 கேரட் ஆபரன தங்கம் ரூ 5282 -க்கு, நிர்ணயம் செய்ய்பட்டுள்ளது. இதனால் ஒரு சவரன் தற்போது ரூ 42256-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ 67-க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை தமிழகத்தில் 22-வது நாளாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலையில், பெட்ரோல் விலை ரூ 102.63-க்கும், டீசல் ரூ94.24-க்கும் விற்கப்படுகிறது.   போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு … Read more

தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்.!

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று பரவல அதிகரித்து வருகிறது. எனவே, தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் மூலம் அது பரவும் ஆபத்து உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், மத்திய அரசும் … Read more

ரேஷன் ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்வு குறித்து பரிசீலனை – ஒரு வாரத்தில் நல்ல முடிவு என அமைச்சர் பெரியசாமி தகவல்

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டி.ஏ) உயர்வு வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 33,174 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1.99 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். இந்த ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் என 24 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்ததுபோல, இந்த ஆண்டு ஜனவரி முதல் 14 … Read more

திருச்சி, உத்தமபாளையம்… தமிழகத்தில் சனிக்கிழமை இந்த ஊர்களில் மின்தடை!

திருச்சி மாவட்டத்தில் பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடைபெற இருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பு காரணமாக ஒரு சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி மாவட்டம் அருள்மிகு பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருச்சி மாவட்டம் உறையூரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 7 மணி … Read more

குடியரசு தலைவர் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாமகவின் வாக்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா?  

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பே, தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம், 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும். புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார், இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் … Read more