மேகதாது ஆணை விவகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து தமிழக அரசு காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க … Read more

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 150 இளைஞர்களிடம் மோசடி.. வெற்றிக்கொடி கட்டு பட பாணியில் சம்பவம்..!

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 150 இளைஞர்களிடம் தலா 1 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோயம்புத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வடவள்ளியில் இயங்கி வரும் afford tours and travels நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரப்படுத்தி உள்ளது. அதனை பார்த்து விண்ணப்பித்தவர்களிடம் முன்பணமாக 1 லட்ச ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை பெற்று … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஜூலை 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விவாதிக்க ஜூலை 17-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்க உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது. அரசு கொறடா அறிவிப்பு இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் … Read more

ஓ.பி.எஸ் இனி அரசியல் அனாதை: பொதுக் குழுவில் நத்தம் விஸ்வநாதன் தாக்கு

ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்துள்ள நிலையில், சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பி.எஸ் இனி அரசியல் அனாதை என்று நத்தம் விஸ்வநாதன் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை அலுலகத்துக்கு சென்றார். அங்கே ஓ.பி.எஸ் உள்ளே செல்வதற்கு இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தடை ஏற்படுத்தினர். அதிமுக அலுவலகத்தின் கதவைப் பூட்டிவைத்தனர். இதனால், அங்கெ … Read more

#திடீர்திருப்பம் : எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர் வாழ்த்து.! 

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்து உள்ளது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், முக்கியமாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும், இதற்காக அதிமுகவில் கொண்டுவரப்பட்ட சட்ட விதி 20 முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது மட்டுமல்லாமல் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றும், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இன்னும் 4 மாதத்தில் நடத்தி முடிப்பதற்கும், அதற்கான தேர்தல் பொறுப்பாளர்களையும் … Read more

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.!

சென்னை அருகே உள்ள வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தேர்வு செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொழுக்குழு கூட்டங்கள் நடைபெற்றன. காலை 9 மணி அளவில் முதலில் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில் 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டதோடு, அவற்றை நிறைவேற்றி தருமாறு பொதுக்குழுவுக்கு … Read more

“அதிமுகவிற்கே இந்த நிலை என்றால், மக்களுக்கு…” – ராயப்பேட்டை சம்பவம் குறித்து இபிஎஸ் ஆவேசம்

சென்னை: “அதிமுகவில் உயர்ந்த பதவிகளை வழங்கிய தொண்டர்களைத் தாக்கி, அவர்களுக்கு நல்ல வெகுமதியை ஓபிஎஸ் வழங்கியுள்ளார்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தொண்டர்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் … Read more

இ.பி.எஸ், கே.பி முனுசாமியை நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவிப்பு: தலைமை அலுவலகத்தில் பேட்டி

அதிமுக பொதுக்குழுவில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இ.பி.எஸ், கே.பி. முனுசாமிக்கு அதிகாரம் இல்லை. இ.பி.எஸ், கே.பி முனுசாமியை நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் மிகுந்த பரபரப்புக்கு இடையே சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, … Read more

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 20ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டுமென தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்காலிய ஆசிரியர் நியமனம் குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்ததாவது, தற்காலிய ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை விரைவுப் படுத்த வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 15க்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு. தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து ஜூலை … Read more

சென்னையில் மோதல்,கல்வீச்சு… அ.தி.மு.க. தலைமையகத்துக்கு சீல்.!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால் அப்பகுதி போர்க்களமானது. நிலைமையை கட்டுப்படுத்த கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அலுவலகத்தின் கதவை பூட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. கற்கள், கட்டைகள் போன்றவற்றை கொண்டு இருதரப்பும் தாக்கிக் கொண்டதுடன் வாகனங்களும் … Read more