திருமணமான ஒன்பதே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் அங்குள்ள பாத்திர கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தரண்யா என்ற மனைவி இருக்கிறார். சம்பவத்தன்று ஐயப்பன் வேலைக்கு சென்ற நிலையில் தனது மனைவிக்கு கைபேசியில் அளித்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் பயந்துபோன வீட்டு உரிமையாளருக்கு அழைத்து தரண்யாவை பார்க்குமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அல்ல மோசடி… யாரும் விளையாட வேண்டாம் – தமிழக டிஜிபி விழிப்புணர்வு வீடியோ!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அல்ல மோசடி என்றும், அதை யாரும் விளையாட வேண்டாம் என்றும் கூறித் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடினால் பணத்தை இழப்பதுடன் அவமானமும் குடும்பத்தில் பிரச்சனையும் ஏற்படும் என்றும், தற்கொலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். Source link

கோவை சிஎம்சி காலனியில் ‘லிப்ட்’ வசதியுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்: கோயிலை இடிக்க எதிர்ப்பால் ஒரு ‘பிளாக்’ இடம்மாற்றம்

கோவை சி.எம்.சி காலனியில், 5 தளங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. கோயிலை இடிக்க எதிர்ப்பு காரணமாக, ஒரு குடியிருப்பு மட்டும் மாற்று இடத்தில் கட்டப்படுகிறது. கோவை வெரைட்டிஹால் சாலை சி.எம்.சி காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், குடும்பத்துடன் வசிக்கின்றனர். தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட 26 கட்டிடங்களில் உள்ள 432 வீடுகளில் மக்கள் வசித்து வந்தனர். கடந்த 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்குடியிருப்புகள் பழுதடைந்ததால், … Read more

12 மணி எப்படி 2 மணி ஆச்சு… டைம் டிராவல்னு சொல்லுவோமா…. சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes : தமிழில் சின்னத்திரையில் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது தொலைக்காட்சிகள் புதிய சீரியலை களமிறங்கி வருகினறனர். இதில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் பல சீரியல் ரசிகர்கள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் வருகிறது. அதுவும் இல்லாமல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் கொடுக்கும் அளவுக்கு ஒரு சில சீரியல்கள் படு மொக்கையாக உள்ளது. இந்த சீரியல்களில் … Read more

சென்னையில் 50 வருடங்கள் பழமையான கார்களின் அணிவகுப்பு.!

சென்னையில் 50 வருடங்கள் பழமையான கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். சென்னை ஈசிஆர் சாலையில் இந்த பழமையான கார் அணிவகுப்பு நடைபெற்றது. சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் பழமையான கார்களை பார்த்து ரசித்தனர். ‘சென்னை கிளாசிக் கார் கிளப்’ தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஓஎம்ஆர் சாலை முதல் ஈசிஆர் சாலை வரை 50 வருட பழமையான 12 கார்கள் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த பழைய கார்களின் அணிவகுப்பை … Read more

ஆட்டை காப்பாற்ற முயற்சித்த போது கிணற்றில் தவறி விழுந்த மனைவி.. மனைவியை மீட்க கிணற்றில் குதித்த கணவன்.. வெளிவர முடியாமல் தவித்த 2 பேரையும் மீட்ட வீரர்கள்..!

மதுரை அருகே, கிணற்றில் தவறி விழுந்து மேலே வரமுடியாமல் தவித்த கணவன் – மனைவியை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, ஆடு மேய்க்கும்போது கிணற்றில் தவறி விழுந்த மனைவியை மீட்க அவரது கணவரும் குதித்தார். இருவரும் மேலே வர முடியாமல் தண்ணீரில் தவித்த நிலையில், தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி இருவரையும் பத்திரமாக மீட்டனர். Source link

பணப்பலன்கள் குறித்த அறிவிப்பு வராததால் இந்தாண்டு ஓய்வுபெறப் போகும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலக்கம்

இரண்டாண்டுகள் பணி நீட்டிப்புக்குப்பின் 60 வயதில் இந்தாண்டு ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணப்பலன்கள் குறித்த அரசின் அறிவிப்பு வராததால் கலக்கத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் 2020-ம் ஆண்டு கரோனா தாக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவும் அதில் தப்பவில்லை. கரோனா காரணமாக அனைத்து செயல்பாடுகளும் முடங்கியதால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்திலும் அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஊதியம் இரண்டாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன், தமிழகத்தில் 2020-ம் … Read more

இந்த மனிதர் உங்களை நோக்கி வருகிறாரா? எதிர்திசையில் ஓடுகிறாரா?

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மனிதர் உங்களை நோக்கி ஓடி வருகிறாரா அல்லது உங்களுக்கு எதிர் திரையில் ஒடுகிறாரா? படத்தை கவனமாகப் பாருங்கள். இந்த படம் உங்கள் ஆளுமை, உடலியல், உறவுகள், உங்கள் மூளை எவ்வாறு செயல்படுகிறது போன்றவற்றை குறிப்பிடுகிறது தெரிந்துகொள்ளுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனித்தால் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இவை பார்ப்பவரின் … Read more

அடடா அருமை – ஆலமரத்தை அலேக்காக இடம் மாற்றிய போலீசார்.! குவியும் பாராட்டு.!

புதுச்சேரி : பழமையான ஆலமரம் ஒன்றை, வேருடன் அகற்றி மற்றொரு இடத்தில் நட்டு வைத்த காவல்துறையினர் அதிகாரிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  மேலும் அந்த பகுதி பொதுமக்கள் காவல்துறையினரின் இந்த செயலுக்கு தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி மூலகுளம் பகுதியில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் அந்த காவல் நிலையம் அமைய உள்ள இடத்தில், 15 வருட பழமையான ஒரு ஆல மரத்தை அகற்ற வேண்டிய சூழ்நிலை … Read more

நீலகிரியில் 2 பேரின் உயிரை பறித்த காட்டு யானை.. கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானையின் இருப்பிடத்தை தேடும் வனத்துறையினர்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2 பேரின் உயிரை பறித்த காட்டு யானை இருக்கும் இடத்தை 2 கும்கி யானைகள் மற்றும் டிரோன் கேமிரா உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஓவேலியில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து கொண்டிருந்த காட்டு யானை ஒன்று, கடந்த 26-ம் தேதி கோவிந்தன் கடை என்ற இடத்தில் ஆனந்த் என்பவரையும், 27-ம் தேதி இரவில் பாரம் பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்ற பெண்ணையும் தாக்கி கொன்றது. அவர்களது உறவினர்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு … Read more