’சூடுபிடித்த ஒற்றை தலைமை’ – ஆதரவு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரனை அவரது இல்லத்தில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். கடந்த சில தினங்களாகவே அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்னை வலுத்து வருகிறது. இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் அ.தி.மு.க.வில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், சட்டமன்ற உறுப்பினர் … Read more

பெல் தொழிற்சங்க தேர்தல்: 3-ம் இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறுமா அ.தி.மு.க?

திருவெறும்பூர் பெல் தொழிற்சாலையைச் சார்ந்த  தொழிற்சங்க அங்கிகார தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிடும் பெல் அண்ணா தொழிற்சங்கத்திற்கான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர்,   எப்போதுமே தொழிலாளர்களது நலனிற்காக போராடும் அண்ணா தொழிற்சங்கம் தற்போது 3 வது இடத்தில் உள்ளது. பெல் தொழிற்சாலையின் பங்குபெறும் முதன்மை சங்கமாக முதலிடத்தைப் பிடிக்கும் வகையில் நமது  … Read more

விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது – பாஜகவின் அதிர்ச்சி அறிக்கை.!

சூலூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு தரிசு நிலங்களுக்கு பதிலாக  விளை நிலங்களை கையகப்படுத்தி, விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது என்று, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தரப்பில் இருந்து வந்துள்ள அறிக்கையில், “சூலூர் விமானநிலையம் பின்புறத்தில் விமானநிலையம் ஓடுதளம் விரிவாக்கம் செய்யவும், ஆயுதக்கிடங்குகள் அமைக்கவும் மத்திய அரசுக்கு நிலம் கையகப்படுத்தி தர 500 ஏக்கருக்கு மேற்பட்ட தரிசு நிலங்களை கையகப்படுத்தாமல் தென்னை, வாழை மற்றும் விவசாயிகள் வீடுகள் அமைந்துள்ள நிலப்பகுதியை … Read more

அரசுப் பணி வாங்கித் தருவதாகக்கூறி 100 பேரிடம் ரூ.3 கோடி மோசடி.. போலி பணி நியமன ஆணை வழங்கி உடைந்தையாக இருந்தவர் கைது..!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து சுமார் 100 பேரிடம் மொத்தம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோகன்ராஜ் என்பவர் போலி கன்சல்டன்சி நடத்தி, ஆவின் உள்ளிட்டவற்றில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி அசல் கல்விச்சான்றிழை பெற்று மோசடி செய்ததாக தனசேகர் என்பவர் புகாரளித்திருந்தார். இதனை விசாரித்த போலீசார், இதேபோல் பலரிடம் தலா 15 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த மோகன்ராஜை … Read more

முதுமலை புல்வெளியில் புரண்டு விளையாடிய புலி: கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு மணி நேரம் புல்தரையில் புரண்டு விளையாடிய புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பெய்து மழையால், மாவட்டம் முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து பெய்த மழையால், புற்கள் முழுத்து பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், வாகன சவாரி மூலம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். … Read more

திருவள்ளூரில் மாயமான இளைஞர் – ராஜபாளையத்தில் சாக்குமூட்டையில் அழுகிய சடலமாக மீட்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாயமான இளைஞர் ராஜபாளையம் அருகே கண்மாயில் அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை சிஎம்ஆர் சாலையை சேர்ந்த மாரிமுத்து என்ற சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் இருந்து வேலைக்கு சென்றவர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை என்ரு கூறப்படுகிறது. இதுகுறித்து … Read more

ஒரு கிளாஸ் தண்ணீர், ஊறவைத்த பாதாம்… காலையில் வெறும் வயிற்றில் இப்படி சாப்பிட்டுப் பாருங்க!

நமது உணவில் நட்ஸ் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான உணவு முறைகளில் ஒன்று. குறைந்த கொழுப்பு சத்து, வைட்டமின்ஸ், மினரல்ஸ் ஆகியன இருப்பதால் ரத்ததில் உள்ள சக்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும், சத்துக்களை நமது உடலில் விரைவில் உள்ளீர்க்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஓமேகா -3 ஃபேட்டி ஆசிட் மூட்டு வாதம் வராமல் இருக்க உதவுகிறது. மேலும் மறதியை குறைக்க உதவுகிறது. பதாம், பிஸ்தா, வால்நட், வேர்கடலை ஆகியவற்றை ஊரவைத்து சாப்பிட்டால் அதில் அதிக நன்மை கிடைக்கும். … Read more

அதிரடியான 6 சீர்திருத்தங்கள் – இடைத்தேர்தலுக்கு ஆப்பு – மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்.!

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட தடை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனை செய்யாவிட்டால் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் பதவி விலகி, இடைத் தேர்தல் வருவதற்கு காரணம் ஆனதற்காக அபராதம் விதிக்கும் படி, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, கடந்த 2004ஆம் ஆண்டு பரிந்துரை செய்ததை மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலாளர் … Read more

போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகரை தாக்கிய போலீசார்.. மூன்று போலீசாருக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்..!

திரைப்பட போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய புகாரில் தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் கார்த்தியின் ‘தோழா’ படம் வெளியான போது அதன் போஸ்டரை ஒட்ட திரவிய ரத்தினராஜ் என்ற காவலர் லஞ்சம் கேட்டதாகவும், அதனை தர மறுத்த மூவரை காவல்நிலையத்தில் வைத்து ஆய்வாளர் சுரேஷ், எஸ்.ஐ. ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கியதாகவும் புகார் மனு … Read more

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூன் 20 முதல் முகக்கவசம் கட்டாயம் 

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வருவோர் ஜூன் 20 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், ஜூன் 20 முதல் உயர் நீதிமன்ற கிளைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறும்போது, ”தமிழகத்தில் … Read more