ஒற்றைத் தலைமை தேவையில்லை; பிரதமர் வற்புறுத்தியதால் துணை முதல்வர் பதவி ஏற்றேன் – ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் பெரும் புயலாக வீசத் தொடங்கியுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையில்லை; ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை இ.பி.எஸ்-தான் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி வற்புறுத்தியதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்” என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவாதம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே பலப்பரீட்சைக்கு வழிவகுத்துள்ளது. இந்த நிலையில், … Read more

லேட்டாக வந்த மகள் கண்டித்த தாய்.. கடுப்பான மகள் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.!

கிருஷ்ணகிரியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ளஓசூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இத்தகைய நிலையில், வேலை முடிந்து இரவு நேரத்தில் தாமதமாக வீட்டிற்கு வந்த சித்ராவை அவரது தாயார் கலா கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சித்ரா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை … Read more

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணி ஒருவரிடம் 46 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்.!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணி ஒருவரிடம் இருந்து 46 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் நகைக் கடையில் பணியாற்றும் நிலையில், விஜயவாடாவிற்கு விற்கபட்ட நகைக்கான பணத்தை வாங்கிவர அவர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்து பினாகினி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த நிலையில், அவரது உடைமைகளை சோதித்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், 46 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். … Read more

சென்னை கால்வாய்களில் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை

சென்னை: அடையாறு ஆறு, வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய்களில் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்வாய் மற்றும் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், அதிநவீன இயந்திரங்களான நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் மூலம் அகற்றப்படும். இந்நிலையில், அடுத்த 15 நாட்களில் அடையாறு … Read more

குமரி தாய் மகள் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிகள் யார்? – 10 நாட்களாக நீடிக்கும் மர்மம்

கன்னியாகுமரியில் தாய் – மகள் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிகள் யார் என்பது குறித்து 10 நாட்களாக மர்மம் நீடித்து வரும் நிலையில், கஞ்சா கும்பலையும் தாண்டி உறவினர்களை நோக்கி தனிப்படையினர் விசாரணையை திருப்பியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவக் கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். மீன்பிடி தொழிலாளியான இவருக்கு, பவுலின் மேரி என்ற மனைவியும், அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உண்டு. ஆன்றோ சகாயராஜ் மற்றும் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் வேலைப் … Read more

மதுரை.! பெண்ணை பிளேடால் கிழித்து தப்பி ஓடிய தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு.!

மதுரை மாவட்டத்தில் பெண்ணை பிளேடால் கிழித்து தப்பி ஓடிய தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சேகரின் மனைவி தனலட்சுமி. சேகர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தனலட்சுமி சாத்தாங்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சேகரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களாக தனலட்சுமி சேகருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சேகர் திருமங்கலம் ரயில் நிலையம் அருகே … Read more

ஓ.பி.எஸ் வருகைக்கு சற்று முன்பு எஸ்கேப் ஆன ஜெயக்குமார்: அ.தி.மு.க அலுவலக காட்சிகள்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் புயலைக் கிளப்பி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் வருவதற்கு சற்று முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கே இருந்து புறப்பட்டு எஸ்கேப் ஆனார். ஆனால், அவர் அப்படி இல்லை என்று மறுத்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் அக்கட்சியில் ஒரு பெரும் புயலை வீசத் தொடங்கியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

வாணியம்பாடியில் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கி 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கியதில் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள தனியார் தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பம்ப் அறையில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் 3 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கழிவு நீர் வெளியேறியதை அடுத்து விஷவாயு தாக்கியதில் மூன்று தொழிலாளர்களும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் … Read more

“அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையில்லை” – ஓபிஎஸ் அடுக்கும் காரணங்கள்

சென்னை: அதிமுகவில் இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்று விரும்பும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “ஒற்றைத் தலைமை தேவையில்லை” என்று தன் தரப்பு காரணங்களை அடுக்கியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நானும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து பொது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பின் கீழ் கட்சியை வழிநடத்தி வருகிறோம். நாங்கள் இணைய வேண்டுமென தொண்டர்கள் விரும்பினார்கள். அப்படி ஒரு சூழல் … Read more

'அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை' – அண்ணாமலை

‘அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை; தலையிடப்போவதும் இல்லை’ எனக் கூறியுள்ளார் அண்ணாமலை.    கோவை மசக்காளிப்பாளையத்தில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”டெல்லியில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு தேவையில்லாத போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், தலைவர்கள் செய்து வருகிறார்கள். கேரளாவில் … Read more