கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. காவல்துறையினர் விசாரணை..!

கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை … Read more

3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம்.. மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு ரேஷன் கடைகளை திறக்க கூட்டுறவுத்துறை உத்தரவு..!

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதிக்காத வகையில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்றுப் பணியாளர்களை கொண்டு கடைகள் திறக்கப்பட்டு, செயல்படுவதை உறுதி செய்ய அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ” No work No pay” என்ற அடிப்படையில் … Read more

சென்னை – சத்தியவாணி முத்து நகர் மக்களுக்கு கே.பி.பார்க் குடியிருப்பில் இடம்: அமைச்சர் ஆலோசனை

சென்னை: சென்னை – சத்தியவாணி முத்து நகர் மக்களுக்கு கே.பி.பார்க் குடியிருப்பில் வீடுகள் அளிப்பது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 59-வது வார்டில் உள்ள சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா காந்தி நகர் பகுதியில் கூவம் நதிக் கரையோரம் வாழ்ந்து வந்த பொதுமக்களை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் மறுகுடியமர்வு … Read more

முதல்வர் குறித்து தொடர் அவதூறு – சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

முதல்வர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் முதல்வர் குறித்து மீண்டும் அவதூறாக பேசியதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டார். மேலும் ஒப்பந்த விதிகளை மீறி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சமூக வலைதள … Read more

மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி… உறுதி செய்த கமல்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Tamil Actor kamal Confirmed Join With Surya on Next Movie : தமிழ்சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்று வரும் படம் விக்ரம். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவுடன் தான் ஒரு முழுநீள படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனை … Read more

தேனி : கணவரின் கண்முன்னே பறிபோன மனைவி உயிர்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

தேனி மாவட்டம் போடி மேலசொக்கணதபுரத்தை சேர்ந்தவர்  ஜெயராமன். இவருக்கு ராமதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதி தனது 4 வயது பேத்தியுடன் மேலசொக்கநாதபுரத்திலிருந்து போடிக்கு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இவர்கள் வாகனம் போடி அருகே வரும் போது , சின்னமனூரில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த ராமதேவி மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கி தலை நசுங்கியது . இதனால் … Read more

முன்னாள் காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்த 4 போதை ஆசாமிகள் கைது.!

மதுரை மாவட்டம் சோழவந்தானில், மது அருந்த பணம் தர மறுத்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரான ஜோதி, ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் காவலாளியாக பணியாற்றி உள்ளார். இயற்கை உபாதை கழிக்க வைகை ஆற்றுப்பகுதிக்கு அவர் சென்ற போது போதை ஆசாமிகள் 4 பேர் மது அருந்த பணம் கேட்டுள்ளனர். தர மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி விட்டு … Read more

6 மாதத்தில் பிரமாண்டமாக எழும்பிய கலைஞர் நூலகம் – கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

மதுரை: மதுரையில் ரூ.99 கோடியில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம் கட்டுமானப் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் மிக பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இந்த கட்டிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் 7 மாடிகளுடன் அமைகிறது. கன்னியாகுமரியில் ஆரம்பித்து தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள், … Read more

’விரைவில் அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர்’.. இபிஎஸ்-க்கு ஆதரவான போஸ்டரால் பரபரப்பு

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து என சுவரொட்டி ஒட்டி நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் புகார் அளித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ளார் என ஓ.பன்னீர்செல்வம் வீட்டு அருகே சுரேஷ் என்ற நபர் ஒட்டிய சுவரொட்டியால் நேற்று அதிமுக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் … Read more

விக்னேஷ் சிவன் பிரஸ்மீட்டில் மிரட்டல்: சென்னை பிரஸ் கிளப் கண்டனம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா திருமணம் நாளை மறுநாள் (ஜூன் 9) நடைபெற உள்ள நிலையில், இன்று விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்போது ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், நாளை மறுநாள் இவர்கள் திருமணம் மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் … Read more