அ.தி.மு.க தொண்டர்கள் இடையே சாதிச் சண்டையை மூட்டி விட முயற்சி: டி.டி.வி தினகரன் திடீர் புகார்

TTV Dinakaran says caste discrimination in ADMK: அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 14) நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டு பேசும்போது, ”தற்போது அ.தி.மு.க.,வில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்களையும் அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளதாக வெளிவந்துள்ள ஆடியோவில், அ.தி.மு.க.,வில் நடப்பவை குறித்து உண்மையாக பேசியுள்ளார். இதையும் படியுங்கள்: ‘யார் எட்டப்பர்கள்?’: இ.பி.எஸ்- சசிகலா திடீர் … Read more

“ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே” – மக்களவையில் ‘வார்த்தைத் தடை’ குறித்து கமல் காட்டம்

சென்னை: “ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே” என்று மக்களவையில் பேசுக்கூடாத வார்த்தைகள் என இடப்பட்டுள்ள பட்டியல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, மக்களவைச் செயலாளர் அறிவிப்பு … Read more

TNPSC மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு கோரிய வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி மதிப்பெண் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்கக்கோரிய வழக்கு  ஆகஸ்ட் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டி.என்.பி.எஸ்.சி செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக … Read more

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்… ஆனால், இங்கே 20 நொடிகளில் பாம்பைக் கண்டுபிடிக்க சவால்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இதனால், இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நெட்டிசன்கள் வெறித்தனமாகப் பார்த்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில், ஒரு மாதிரியாகவும், இரண்டாவது பார்வையில் குழப்பமானதாகவும் இருக்கும். இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், … Read more

#BigBreaking || ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு,!

அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக்  கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடங்கியவுடன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, “அதிமுகவின் கட்சி விதிமுறைகளை படி தலைமை நிலைய செயலாளர்தான் தலைமைக் கழகத்தின் பொறுப்பாளர். தலைமை அலுவலக சொத்தை பொறுத்த வரை அதன் உரிமை என்பது அதிமுகவிடம் உள்ளது. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டபோது, காவல்துறையினர் … Read more

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை; இடைக்கால தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-2006 ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா … Read more

முறிவில் முடிந்த திருமணங்கள் – காதலியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பெண்ணை கழுத்தறுத்து கொன்றுவிட்டு வாலிபர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவெறும்பூரில் நடந்திருக்கிறது.  திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார் கோட்டை, பழைய அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் வினோத்குமார் (36) தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முதல் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அதுவும் தற்போது விவாகரத்து நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த … Read more

பிரபுதேவா வித்தியாசம் கைகொடுத்ததா? மைடியர் பூதம் விமர்சனம்

மஞ்சப்பை என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் ராகவன் தற்போது குழந்தைகளை கவரும் வகையில் மை டியர் பூதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரபுதேவா பூதமாக நடித்துள்ள இந்த படத்தில் நம்யா நபீசன், அஸ்வந்த், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் சில வருடங்களுகளுக்கு பிறகு குழந்தைகளுக்காக தயாராகியுள்ள மைடியர் பூதம் குழந்தைகளை கவரும் அளவுக்கு உள்ளதா? பார்க்கலாம். ஒரு புற்றுக்குள் தியானம் செய்யும் முனிவரின் தவத்தை பிரபுதேவாவின் மகன் கலைத்துவிடுகிறான். இதனால் கோபப்படும் முனிவர் அந்த சிறுவனுக்கு … Read more

“சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது புதிதல்ல” – சு.வெங்கடேசன் 

சென்னை: “சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது புதிதல்ல” என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்கள் தொடர்பான பட்டியலை மக்களவைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், “சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்ற … Read more

44வது செஸ் ஒலிம்பியாட்: பிரதமரை நேரில் அழைக்க டெல்லி செல்லும் முதல்வர்?

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு நேரடியாக அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில்டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி துவக்கவிழா பிரம்மாண்டமாக … Read more