சசிகலாவை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்றுமுன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தன் மீதான வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ளமத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும்என்று மதுரை ஆதீனம் குறிப்பிட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘ஆதீனத்தின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. அறநிலையத் துறை என்பது புனிதமானது. முன்னாள் … Read more

Tamil News Today Live: ரேஷன் ஊழியர்கள் ஸ்டிரைக் – சம்பளம் பிடிக்க உத்தரவு

Go to Live Updates Tamil Nadu News Updates: வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறைக்கு உத்தரவும். NO work NO pay என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடிக்க மண்டல இணைப்பதிவாளருக்கு ஆணை நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி. சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் பதவியை தக்க வைத்தார் போரிஸ் ஜான்சன். மதுரைக்கு … Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

மதுரையில் இளைஞர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 2ஆவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஷ்ணு(வயது 27). இவர் மாடக்குளம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இளைஞர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே … Read more

எத்தனை இசை வந்தாலும் அவை தமிழ் இசையாக இருக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: எத்தனை இசை வந்தாலும், வளர்ந்தாலும் அவை தமிழ் இசையாக இருக்க வேண்டும் என்று முத்தமிழ் பேரவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முத்தமிழ் பேரவையின் 41-வது இசை விழா மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முத்தமிழ் பேரவை செயலர் பி.அமிர்தம் வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் ஜி.ராமானுஜம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை, பேரவையின் பொருளாளர் இ.வி.ராஜன், … Read more

திருச்சி சிறையில் மோதல்; புழல் சிறைக்கு தூக்கி அடிக்கப்பட்ட மதுரை காளி

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 8 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை காமராஜபுரம் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த காளி என்ற வெள்ளைக்காளி என்பவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருடைய நண்பர்கள் அழகுராஜ், நாகப்பன் ஆகியோரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில், கடந்த மாதம் சிறைக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அழகுராஜ் உள்ளிட்ட 4 … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (07.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 07/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 21/18/16 நவீன் தக்காளி 60 நாட்டு தக்காளி 53/50 உருளை 32/30/23 சின்ன வெங்காயம் 40/30/25 ஊட்டி கேரட் 40/35/30 பீன்ஸ் 60/50/40 பீட்ரூட். ஊட்டி /45.40 கர்நாடக பீட்ரூட் 30/27 சவ் சவ் 30/28 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 40/30 வெண்டைக்காய் 35/15 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி 35/30 காராமணி … Read more

'சகோதரிகளிடம் கடன்; குடும்பத்தில் பிரச்சினை' – ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நகைகள், பணம் என ரூ.20 லட்சத்துக்கு மேல் இழந்த இளம்பெண் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பவானி (29). இவர் கணிதத்தில் இளநிலை பட்டம் பெற்றவர். இவருக்கும் பாக்கியராஜ் (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள்உள்ளனர். பழைய மகாபலிபுரம்சாலை, கந்தன்சாவடியில் உள்ளஹெல்த்கேர் சென்டரில் பவானி பணியாற்றி வந்தார். ஒரு வருடத்துக்கு முன்பு பவானிக்கு … Read more

அரசுப் பேருந்துகளில் செல்போன் பயன்படுத்த வருகிறது புதியக் கட்டுப்பாடு?

பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பேச, பாடல்கள் கேட்க மற்றும் வீடியோ கேம் விளையாட கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. நவீன காலத்தில் நாம் அன்றாட தேவைகளில் ஒன்றாகிவிட்டது செல்ஃபோன் பயன்பாடு. தற்போது செல்ஃபோனை நாம் பயன்படுத்தாத இடங்களே இல்லை எனக் கூறலாம். ஒருசில நேரங்களில் இந்த செல்ஃபோன் பயன்பாட்டால் நன்மைகள் இருப்பினும், சில நேரங்களில் அந்த செல்ஃபோனால் நாம் மட்டுமின்றி, மற்றவர்களும் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது என்றேக் கூறலாம். அதுவும் பொது இடங்களில் இந்த செல்ஃபோனால் பெரும்பாலானவர்கள் … Read more

வெளிநாடுகளில் மீட்கப்பட்ட 10 சிலைகள்: கும்பகோணத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவு

எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மீட்டு வரப்பட்ட தமிழக கோயில்களுக்கு சொந்தமான 10 புராதான உலோக மற்றும் கற்சிலைகள் இன்று கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த சிலைகளை மே 8-ம் தேதி வரை பாதுகாப்பு மையத்தில் வைக்க கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார். தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாட்டு மியூசியங்களில் வைக்கப்பட்டிருந்த உலோக மற்றும் புராதான கற்சிலைகள் மீட்கப்பட்டு சிலை கடத்தல் … Read more