சூர்ய வம்சம் படத்தை நேர்ல பாத்த மாதிரியே இருக்கு.. அப்படி என்னதான் செய்தார் விஜே மணிமேகலை?

சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார். பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி ஆன … Read more

#திண்டுக்கல் || தூங்கி கொண்டிருந்த விவசாயி வெட்டி கொலை.. மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!

விவசாயியை கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், போல்நாயக்கன்வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு துரைக்கன்னு என்ற மனைவியும், முத்துலட்சுமி, விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வி என்ற மூன்று மகள்களும் உள்ளனர். அவரது மனைவி இறந்துவிட்டதாலும் மகள்களுக்கு திருமணமானதாலும்  அவர் மட்டும் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரையைப் பிரித்து வீட்டின் உள்ளே வந்த மர்ம நபர்கள் உறங்கிக் கொண்டிருந்த  அவரை வெட்டிபடுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். காலையில் வேலைக்கு வந்த பெண் வந்த … Read more

பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… தலைமறைவான தலைமை ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில், பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் தலைமை ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். வெங்கடேசன் என்ற அந்த தலைமை ஆசிரியர், இரண்டு பத்தாம் வகுப்பு மாணவிகளை வெவ்வேறு நாட்களில் வகுப்புகள் முடிந்த பின் பள்ளியில் இருக்கச் சொல்லி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவிகள் குழந்தைகளுக்கான உதவி எண் 1098-ஐ அழைத்து புகார் அளித்துள்ளனர். தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் – சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார். தென்னிந்தியாவில் முதல்முறையாக, சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில், ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற பெயரில் ரூ.1 கோடி மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உபகரணங்கள், … Read more

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் மாற்றமா? ரிசர்வ் வங்கி விளக்கம்

No proposal to replace face of Mahatma Gandhi on banknotes: RBI: ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று, ரூபாய் நோட்டுகளில் ரபீந்திரநாத் மற்றும் அப்துல் கலாம் படங்கள் இடம்பெற உள்ளதாக வெளியான அறிக்கைகளை நிராகரிக்கும் வகையில் திங்களன்று ரிசர்வ் வங்கி கூறியது. நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றி வேறு சிலரின் படங்களை இடம்பெறச் செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து … Read more

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா.. போக்சோவில் கைது.!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாரையூரணி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் (வயது 37). இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த இவரது அண்ணன் மகளான 15 வயது பள்ளி சிறுமி நாரையூரணிக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சித்தப்பா பாலமுருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் செல்போனில் நடந்ததை தெரிவித்துள்ளார்.  இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் … Read more

எடப்பாடி தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என முதலமைச்சர் கூறியது தவறு – எதிக்கட்சித் தலைவர்.!

அதிமுக ஆட்சியில் எடப்பாடி தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என முதலமைச்சர் தவறாக கூறியதாகவும், கல்லூரிகள், சாலை வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் பேட்டியளித்த அவர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான உயிர்கள் பறிபோவதாகவும், இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். Source link

சென்னை சுற்றுலா சொகுசுக் கப்பலுக்கு ரங்கசாமி அரசு அனுமதி வழங்கியதா? – புதுச்சேரி அதிமுக கேள்வி

புதுச்சேரி: சொகுசு கப்பல் புதுச்சேரியில் நிற்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதா என்று சுற்றுலாத் துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஓராண்டு காலத்தில், தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டப்பேரவையின் அறிவிப்புகளையும், முழுமையாக நிறைவேற்றி வருகிறது. மின்துறை தனியார் மயமாக்கல் போன்ற மத்திய அரசின் திட்டங்களை, வேறு வழியின்றி செயல்படுத்தும் போதும், மக்களுக்கு … Read more

அது ரொம்ப நாளாவே இருக்கு… நாங்க தான் காட்டிக்கல…

பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்ததால் உலக அளவில் சர்ச்சையானது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது என்று தெரிவித்ததோடு, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் … Read more

கூடுதல் நகையை கணக்கில் சேர்ததால் நகைகடன் கிடைக்கவில்லை.. ஆட்சியர் அலுவலகத்தில் மண்எண்ணெயுடன் வந்த பெண்..!

தேனி மாவட்டம், எரசக்கநாயக்கனூரை சேர்ந்த பரமசிவம். இவரது மனைவி பவுன்தாய். இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றிய நிலையில் வந்திருந்தார்.  அவர் மீது மண்எண்ணெய் வாசம் அடித்ததால் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் தெரிவிக்கையில் எரசக்கநாயக்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் என்னுடைய 40 கிராம் தங்க நகையை அடகு வைத்து கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கடன் பெற்றுள்ளதாகவும் எனது நகையுடன் மேலும் … Read more