கோவை – திருச்சி மேம்பாலத்தில் விபத்து – 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நபர்
கோவை மாவட்டம் திருச்சி சாலை மேம்பாலத்தின் 40 அடி உயரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேம்பாலம் திறக்கப்பட்ட 2 மாதங்களில் இது மூன்றாவது உயிரிழப்பாகும். கோவை மாவட்டம் ஒப்பணக்கார வீதி பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆனந்தகுமார், ஒண்டிபுதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று வழக்கம்போல பணிக்கு ஒண்டிபுதூர் நோக்கி திருச்சி மேம்பாலத்தின்மீது அவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். அப்போது சுங்கம் பகுதியின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி … Read more