சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட இந்தியாதான் மக்களாட்சி நிலவும் நாடாக இருக்கும்: பரிசளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை: சமூகநீதி, சமத்துவம், சகோதரத் துவம் கொண்ட இந்தியாதான், மக்களாட்சி நிலவும் நாடாக இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. மாணவர்களுக்குப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: `தலைநிமிரும் தமிழகம்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது. பேச்சுப் … Read more