தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் விவரங்களை சேகரிக்க டிஜிபி உத்தரவு

சென்னை: ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக, வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் தொழிலதிபர், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 1,000 பவுன் தங்கம்மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக நேபாளத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொருவர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, மேலும் சில குற்ற … Read more

தினமும் இத்தனை கிளாஸ் டீ ஓ.கே… அதை தாண்டினால் இத்தனை பிரச்னைகள்!

Drink more tea side effects in tamil:  உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானமாக டீ உள்ளது. சில நாடுகளில் காபிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், டீ (தேநீர்) தான் உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாக இருக்கிறது. இந்த அற்புத பானத்தை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட … Read more

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தில் இணையப் போகும் பகுதி.? பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி.!!

புதுச்சேரி ஆட்சியாளர்களால் காரைக்கால் மாவட்டத்தை புறக்கணிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வரும் நிலையில், காரைக்காலை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என கோரி ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த இயக்கத்தின் சார்பில் காரைக்கால் முழுவதும் முக்கிய சாலைகள், மக்கள் கூடும் இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் அசிங்கம்! அவமானம்!! வெட்கம்!! புதுவை அரசே …? நாங்கள்… என்ன அனாதைகளா…! காரைக்கால் மக்களுக்கு காலம் காலமாக எவ்வித அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் வழங்காத புதுவை அரசை நாங்கள் புறக்கணிக்கின்றோம். … Read more

அடேய் அப்ரண்டிஸ் டாக்டர், பெண் வயிற்றுக்குள்ள இதெல்லாமாடா வைத்து தைப்பீங்க…? அலட்சியத்தால் 7 மாதமாக அவதி..!

காட்டுமன்னார் கோவிலில் ஏ.கே.செந்தில்குமார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் துணி,நூல், இரும்புத்துண்டு மற்றும் ஊசி உள்ளிட்டவற்றை வைத்து தைத்துவிட்டதாக, 7 மாதமாக வலியால் அவதிக்குள்ளான அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மாதர் சூடாமணி கிராமத்தை சேர்ந்த 36 வயது பெண் கலைச்செல்வி. இவருக்கு திருமணமாகி கணவர் பிரிந்து சென்ற நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு சம்பந்தமாக சிதம்பரம் சாலையில் காட்டுமன்னார் கோவிலில் இயங்கும் ஏ.கே.செந்தில் … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரமில்லை: மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின்(யுஜிசி) செயலர் ரஜினீஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: சேலம் பெரியார் பல்கலை. தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்திவருவது தெரியவந்துள்ளது. இது விதிகளை மீறும் செயலாகும். பெரியார் பல்கலை.யில் உள்ள தொலைநிலைப் படிப்புகளுக்கு 2020 ஜூன் மாதம்வரையே அனுமதி தரப்பட்டுள்ளது. அதன்பின் எவ்வித படிப்புக்கும் பல்கலை. அங்கீகாரம் பெறவில்லை. இதனால் பெரியார் பல்கலை. மீது உரிய நடவடிக்கை எடுக்க யுஜிசி முடிவெடுத்துள்ளது. அதன்படி அடுத்த 2 கல்வியாண்டுகள் பெரியார் பல்கலை.யின் தொலைநிலைக்கல்வி … Read more

மதுரை: திரும்ப பெறப்பட்டது தூய்மை பணியாளர்களின் 2 நாட்கள் போராட்டம்

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 2 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றனர். மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 3,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் கடந்த இரு தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் ‘தினக்கூலி தொழிலாளர்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், … Read more

அதிகரிக்கும் குரங்கு அம்மை வைரஸ்.. தமிழக சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு.!

குரங்கு அம்மை வைரஸ் பிரிட்டன், ஐரோப்பிய, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருவதால், இந்தியாவில் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணித்து உடனே தனிமைப்படுத்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர்கள் மற்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உடலில் தடிப்புகள் இருப்பவர்கள், குரங்கு அம்மை இருக்கும் நாட்டுக்கு கடந்த 20 நாட்களில் … Read more

கொடைக்கானலில் கோடை விழா.. பவாய் கரகம், தோண்டி கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவின் 8வது நாளான நேற்று ராஜஸ்தான் பவாய் கரகம்,தோண்டி கரகம் மற்றும் மலைகிராம மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். சாகச கரகாட்டம்,தப்பாட்டம்  மற்றும் பழமை வாய்ந்த இசை வாத்தியங்கள் முழங்க பூம்பாறை பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்டவையும் நடைபெற்றது. Source link

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 6 இடங்களுக்கு 13 பேர் மனு தாக்கல்; இன்று பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு, அரசியல் கட்சி களின் வேட்பாளர்கள் 6 பேர் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஜூன் 1) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன்10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறுவதால், 6-ல் … Read more

முதலாளி பாலியல் தொல்லை அளிக்கிறார்.. பெண் செய்த விபரீத செயல்..!

முதலாளி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் நவனீதன் என்பவருக்கு சொந்தமான துணிகடையில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 11 ஆண்டுகளாகவேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பல முறை பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நவனீதனின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால்கூறி விரட்டியுள்ளனர்.  இந்நிலையில், … Read more