கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்.. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தகவல்..!
தமிழகத்தின் தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 90 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link