தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 19-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். … Read more

TNPSC Group 2: அரை மணி நேரத்திற்கு முன் வராவிட்டால் தேர்வு எழுத முடியாது; தேர்வு அறை விதிமுறைகள் கவனித்தீர்களா?

TNPSC group 2 exam hall tips for aspirants: குரூப் 2 தேர்வுக்கு 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு அறைகளில் அனுமதிக்கப்பட மாட்டார் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்தநிலையில், தேர்வு கூடத்திற்கு எத்தனை மணிக்குச் செல்ல வேண்டும், தேர்வறையில் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது … Read more

#சென்னை || தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேர் அதிரடியாக கைது.!

சென்னையில் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வில்லிவாக்கம், ராஜாஜி நகர் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திலகராஜ் என்பவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை அணிந்திருந்த தங்க நகையை பறித்துச் சென்றது. இதேபோல வினோத் என்பவரின் தங்கச் சங்கிலியையும் இந்த வழிப்பறி கும்பல் பறித்து சென்றுள்ளது. இதுகுறித்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த … Read more

ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு – சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார்.!

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படுமென கோவையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருச்சியைச் சேர்ந்த ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். சிபிசிஐடி, சிபிஐ விசாரணை நடத்தியும் இதுவரையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில், நேற்று திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை தொடர்ந்து, கோவையிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. Source link

6 முக்கியப் பேருந்து நிறுத்தங்களில் கழிவறை உள்ளிட்ட வசதிகள்: ரூ.3.96 கோடியில் சென்னை மாநாகராட்சி திட்டம்

சென்னை: சென்னையில் உள்ள 6 பேருந்து நிறுத்தங்களை கழிவறை வசதியுடன் ரூ.3.96 கோடி செலவில் மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 1,000 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்தி வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்தப் பேருந்து நிறுத்தங்களில் விளம்பரங்களை வைக்க அனுமதி அளித்து வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக 6 பேருந்து நிறுத்தங்களில் இந்தப் … Read more

ஸ்டாலின்- அமைச்சர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோ: அண்ணாமலைக்கு தி.மு.க பதிலடி

Tamilnadu Ministers Conversation In English: தமிழகத்தில் உள்ள 90 சதவீதம் அமைச்சர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது விமானமும் ஏறத்தெரியாது என்று விமர்சனம் செய்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைச்சர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோ கட்சியை தற்போது திமுக வெளியிட்டுள்ளது. சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் … Read more

#தமிழகம் || சிவன் கோவிலில் வெட்டிய மாமர கிளையில் காய்த்து குலுங்கும் மாங்கனிகள்.! சிவன் அருளா? குவியும் மக்கள்.!

திருப்பூர் அருகே வெட்டிய மாமரக்கிளை பகுதியிலிருந்து கொத்துக்கொத்தாக மாங்கனிகள் காய்த்திருப்பது பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே வெட்டிய மரக்கிளையில் இருந்து மாங்கனிகள் காய்த்து வருவதை அந்த பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகின்றனர். மலையாண்டி பட்டி கிராமத்தை சேர்ந்த சவுந்ம்மாள் என்பவர், சிவன் கோயில் ஒன்றை எழுப்பியுள்ளார். இந்த கோவிலின் அருகே மாமரம் ஒன்று இருந்தது. இந்நிலையில், கோவில் விரிவாக்கப் பணிக்காக அந்த மாமரத்தின் சில கிளைகளை வெட்டி உள்ளனர். … Read more

வீட்டுமனை பட்டா பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய அலுவலக சர்வேயர் கைது.!

மதுரையில் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் வீட்டு மனை பட்டா மாற்றுவதற்காக, பழங்காநத்தம் வி.ஏ.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அங்கு பணியில் இருந்த சர்வேயர் பாலமுருகன் என்பவர் 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், சுகுமாரன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகாரளித்துள்ளார். அவர்களது ஆலோசனையின் படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, சர்வேயர் பாலமுருகனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த … Read more

இலங்கைக்கு தமிழக அரசின் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது கப்பல் – முதல்வர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

சென்னை: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் செல்லும் கப்பலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும் … Read more