ஸ்டாலின்- அமைச்சர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோ: அண்ணாமலைக்கு தி.மு.க பதிலடி

Tamilnadu Ministers Conversation In English: தமிழகத்தில் உள்ள 90 சதவீதம் அமைச்சர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது விமானமும் ஏறத்தெரியாது என்று விமர்சனம் செய்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைச்சர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோ கட்சியை தற்போது திமுக வெளியிட்டுள்ளது. சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் … Read more

#தமிழகம் || சிவன் கோவிலில் வெட்டிய மாமர கிளையில் காய்த்து குலுங்கும் மாங்கனிகள்.! சிவன் அருளா? குவியும் மக்கள்.!

திருப்பூர் அருகே வெட்டிய மாமரக்கிளை பகுதியிலிருந்து கொத்துக்கொத்தாக மாங்கனிகள் காய்த்திருப்பது பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே வெட்டிய மரக்கிளையில் இருந்து மாங்கனிகள் காய்த்து வருவதை அந்த பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகின்றனர். மலையாண்டி பட்டி கிராமத்தை சேர்ந்த சவுந்ம்மாள் என்பவர், சிவன் கோயில் ஒன்றை எழுப்பியுள்ளார். இந்த கோவிலின் அருகே மாமரம் ஒன்று இருந்தது. இந்நிலையில், கோவில் விரிவாக்கப் பணிக்காக அந்த மாமரத்தின் சில கிளைகளை வெட்டி உள்ளனர். … Read more

வீட்டுமனை பட்டா பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய அலுவலக சர்வேயர் கைது.!

மதுரையில் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் வீட்டு மனை பட்டா மாற்றுவதற்காக, பழங்காநத்தம் வி.ஏ.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அங்கு பணியில் இருந்த சர்வேயர் பாலமுருகன் என்பவர் 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், சுகுமாரன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகாரளித்துள்ளார். அவர்களது ஆலோசனையின் படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, சர்வேயர் பாலமுருகனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த … Read more

இலங்கைக்கு தமிழக அரசின் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது கப்பல் – முதல்வர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

சென்னை: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் செல்லும் கப்பலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும் … Read more

EPFO Alert: இப்படி மெசேஜ்- கால் வந்தா உஷார் ஆயிடுங்க… இல்லாட்டி மொத்த பணமும் அம்பேல்!

EPFO Alert Tamil News: வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் மக்கள் கவனத்திற்கு, நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை மோசடி செய்பவர்கள் திருட பல வழிகளை கண்டுபிடித்துள்ளார்கள். அவர்கள் உங்கள் பிஎஃப் கணக்கின் விவரங்களைக் கேட்பதன் மூலம் ஆன்லைன் மோசடிகள் முதல் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்வது வரை அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஆன்லைன் மோசடி அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அதுபோன்ற ஆன்லைன் மோசடி அச்சுறுத்தலை நீங்கள் தவிர்க்க உங்களுக்கு சில குறிப்புகளை இங்கு வழங்கியுள்ளோம். … Read more

திருமூர்த்தி மலையில் சாரல் மழை.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை.!

திருமூர்த்தி மலையில் சாரல் மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதில் குளித்து மகிழ தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் … Read more

என் விடுதலைக்காகப் போராடிய அனைவருக்கும் நன்றி – பேரறிவாளன்

தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் கூறியுள்ள பேரறிவாளன், விடுதலை கிடைத்துள்ளதால் சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ராஜுவ்காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலையான அவர், மரண தண்டனையே கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறினார். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறிய அவரது தாயார் அற்புதம்மாள், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும் கூறினார். Source link

பலத்த பாதுகாப்புடன் மதுரை மாநகராட்சிக் கூட்டம்: மேயரை செல்லவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடந்த மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பேச வாய்ப்பு கொடுக்காததால் திமுக கவுன்சிலர்கள் மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் நடந்த மதுரை மாநகராட்சி கூட்டம் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம், மேயர் கணவர் ஆதரவாளர்கள், செய்தியாளர்கள் மீது தாக்குதல் போன்ற ரகளையால் விவாதமில்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் முடிந்தது. அதனால், இன்று மீண்டும் மாநகராட்சி கூட்டம் உதவி ஆணையர் மேற்பார்வையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் … Read more

இதில் வாத்து மட்டும்தான் தெரிஞ்சுதா? உங்க மூளை பவர் இதுதான் பாஸ்!

சமூக ஊடகங்களில் சமீப காலமாக ஆப்டிகல் இலுசியன் என்கிற மனதை மருளச் செய்யும் படங்கள் அதிக அளவில் வெளியாகி பகிரப்பட்டுவருகிறது. இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் புதிர் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் ஆளுமையைக் குறிப்பதாகவும் இருப்பதால் பலரும் அதைப் பார்த்து தங்கள் ஆளுமையையும் குணலனையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். அந்த வகையில், இந்த ஆப்டிகல் இலுசியன் படம் உங்கள் மூளை பவரை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது இந்த படத்தில் உங்களுக்கு வாத்துமட்டும்தான் தெரிகிறது என்றால் உங்கள் மூளை பவர் இதுதான் என்று … Read more

பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை.!

சென்னைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்காக பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைத்திருத்தலுக்கான நகர முதலீடுகள் (City Investments To Innovate, Integrate and Sustain – CITIIS) திட்டத்தின் … Read more