பலத்த பாதுகாப்புடன் மதுரை மாநகராட்சிக் கூட்டம்: மேயரை செல்லவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடந்த மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பேச வாய்ப்பு கொடுக்காததால் திமுக கவுன்சிலர்கள் மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் நடந்த மதுரை மாநகராட்சி கூட்டம் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம், மேயர் கணவர் ஆதரவாளர்கள், செய்தியாளர்கள் மீது தாக்குதல் போன்ற ரகளையால் விவாதமில்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் முடிந்தது. அதனால், இன்று மீண்டும் மாநகராட்சி கூட்டம் உதவி ஆணையர் மேற்பார்வையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் … Read more

இதில் வாத்து மட்டும்தான் தெரிஞ்சுதா? உங்க மூளை பவர் இதுதான் பாஸ்!

சமூக ஊடகங்களில் சமீப காலமாக ஆப்டிகல் இலுசியன் என்கிற மனதை மருளச் செய்யும் படங்கள் அதிக அளவில் வெளியாகி பகிரப்பட்டுவருகிறது. இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் புதிர் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் ஆளுமையைக் குறிப்பதாகவும் இருப்பதால் பலரும் அதைப் பார்த்து தங்கள் ஆளுமையையும் குணலனையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். அந்த வகையில், இந்த ஆப்டிகல் இலுசியன் படம் உங்கள் மூளை பவரை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது இந்த படத்தில் உங்களுக்கு வாத்துமட்டும்தான் தெரிகிறது என்றால் உங்கள் மூளை பவர் இதுதான் என்று … Read more

பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை.!

சென்னைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்காக பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைத்திருத்தலுக்கான நகர முதலீடுகள் (City Investments To Innovate, Integrate and Sustain – CITIIS) திட்டத்தின் … Read more

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு மே மாதம் 22ந் தேதி நடைபெற்ற அந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணையின் இறுதிகட்ட அறிக்கையை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அருணா ஜெகதீசன் தாக்கல் செய்தார். Source link

“வெங்காயம் உரிக்கும் வேலையை பாருங்க” – அண்ணாமலை கருத்தை கலாய்த்த திமுக எம்.பி

சென்னை: பேரறிவாளன் தீர்ப்பு தொடர்பான பாஜக தலைவர் அண்ணாமலை கருத்தை கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளார் திமுக எம்.பி செந்தில்குமார். பேரறிவாளன் விடுதலை குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழ்நாடு பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்!” என்று குறிப்பிட்டிருந்தார். தீர்ப்பே … Read more

TNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி?

TNPSC group 2 exam OMR shading and Time Management tips: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வில் ஓ.எம்.ஆர் ஷீட்டை எப்படி நிரப்புவது? தேர்வுக்கான கால அவகாசத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது குறித்து இப்போது பார்ப்போம். முதலில் தேர்வாணையம் அறிவித்துள்ளப்படி கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே தேர்வில் பயன்படுத்துங்கள். வேறு நிற பேனாக்களை பயன்படுத்த வேண்டாம். அடுத்ததாக, ஓ.எம்.ஆர் ஷீட் … Read more

பேரறிவாளன் விடுதலை ஆழ்ந்த வேதனை மற்றும் ஏமாற்றம்.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா.!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆழ்ந்த வேதனை மற்றும் ஏமாற்றத்தை அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மிகவும் மலிவான அரசியல் லாபத்துக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியை விடுதலை செய்யும் சூழ்நிலைக்கு அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் முடிவு ஆழ்ந்த வேதனை மற்றும் ஏமாற்றத்தை … Read more

இராமநாதபுரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை, மதுபோதையில் தாக்கிய 6 பேர் கொண்ட கும்பல் கைது.!

இராமநாதபுரம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை, மதுபோதையில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். குற்றப்பிரிவு காவலர்களான வசந்த், லிங்கநாதன் ஆகியோர் நரிப்பையூர் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த கும்பல் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதோடு, மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் காவலர்கள் இருவரும் காயமடைந்த(( நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது … Read more

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு:  சார்பு ஆய்வாளருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இவர்கள் இருவரையும் கடந்த 2020 ஜூன் 19ம் தேதி கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் … Read more

முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்

சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை  பேரறிவாளன், அற்புதம்மாள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் ஏற்கெனவே தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் மற்றும் … Read more