குடும்ப பிரச்னை: தாய், மகள் எடுத்த விபரீத முடிவு – கும்பகோணத்தில் சோகம்

திருநாகேஸ்வரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (58). பர்னிச்சர் வியாபாரம் செய்து வரும் இவருக்கு ராணி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், அன்பழகனுக்கும் ராணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராணி அவரது தாயார் மீனாட்சி (65) ஆகிய இருவரும் மொட்டை மாடியில் தூக்கிலிட்டு … Read more

டெலிட் செய்த மெசேஜை மீண்டும் பார்க்க முடியும்… வாட்ஸ்அப் அசத்தல் அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் உள்ள டெலிட் மெசேஜ் ஆப்ஷன் பயனர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால், பயனர்கள் ‘Delete for everyone’ஆப்ஷன் கிளிக் செய்வதற்கு பதிலாக ‘Delete for me’ கொடுத்துவிட்டால், அதனை மீட்டெடுக்க முடியாது. இதனால், முக்கியமான மெசேஜ் அல்லது போட்டோவை பயனர்கள் மிஸ் செய்ய நேர்ந்தது. இந்த புகாரை நீண்டு நாள்களாக ஆராய்ந்து வந்த வாட்ஸ்அப், அதற்கான தீர்வை கொண்டு வந்துள்ளது. தவறுதலாக டெலிட் செய்யப்பட்ட மெசேஜை உடனடியாக மீட்டெடுக்க undo பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. மெசேஜை … Read more

ரூ.1000 மாத ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசை வலியுறுத்தும் மருத்துவர் இராமதாஸ்.!

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வலியுறுத்தல் இதுகுறித்த இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் கற்பித்தல் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இந்தக் குற்றச்சாட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு ஊதியம் … Read more

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை பெசன்ட் நகரில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்ற அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வி.மெய்யநாதன், பொது மக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினர். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிளாஸ்டிக் பைகளை கண்டாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும் என்றார். அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து மக்கள் மஞ்சப்பை உயயோகத்திற்கு வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கல்வி நிலையங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். Source link

கோவை | காவலரால் தாக்கப்பட்ட விவகாரம்: உணவு விநியோக நிறுவன ஊழியரிடம் டிஜிபி நலம் விசாரிப்பு

கோவை: கோவை பீளமேடு அருகே, காவலரால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உணவு விநியோக நிறுவன ஊழியரை தொடர்புகொண்டு டிஜிபி சைலேந்திரபாபு நலம் விசாரித்தார். கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம்(38). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர், தனியார் (ஸ்விகி) உணவக விநியோக நிறுவனத்தில் ஊழியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை (ஜூன் 4-ம் தேதி), மோகனசுந்தரம் ஹோப்காலேஜ் பகுதி உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் எடுத்துக் கொண்டு, … Read more

அரக்கோணம்: பிறந்து 40 நாட்களேயான குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்கள் ஆன குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தோல்ஷாப் பகுதியை சேர்ந்த மனோ (வயது 22), அம்ச நந்தினி (வயது 20) ஆகியோருக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் யுவன் என்ற ஆண் குழந்தை 40 நாட்கள் முன்பு  பிறந்துள்ளது. குழந்தையின் தந்தை மனோ, சென்னை திருநின்றவூரில் பூக்கடையில் வேலை செய்து வருகிறார். கணவன், மனைவி … Read more

பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விளம்பரம்… ட்விட்டர், யூடியூப்பில் நீக்கிட அரசு உத்தரவு

பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் டியோடரண்ட் விளம்பரத்தை, ட்விட்டர் மற்றும் யூடியூப்-லிருந்து நீக்கிட தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விளம்பரத் துறையின் சுய-ஒழுங்குமுறை அமைப்பும், லேயர் ஷாட் விளம்பரம் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி, அதனை ஒளிப்பரப்பு செய்வதை நிறுத்திட நிறுவனத்திடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பரம், தகவல் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறை விதிகளை மீறுவதாக, ட்விட்டர் மற்றும் யூடியூப்பிற்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதனை, பலரும் தங்களது ட்விட்டர் … Read more

எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

இளைஞரின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த படாளம் காவல் எல்லைக்குள் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோணிப்பை ஒன்று கிடந்தது. அதில் பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, கோணிப்பையில் 35 வயதுடைய ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அவரின் உடலை … Read more

இந்த தொழில் செஞ்சா கட்டுகட்டாக பணம்..! மிரண்டு போன போலீஸ்..! சென்னை போலீஸ் அதிரடி..!

சென்னையில் 50 போலியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த மூன்று சகோதரர்கள்  உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 58 லட்சம் ரூபாயை கைப்பற்றி உள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த சகோதரர்களான பொன்ராஜ், கெவின்ராஜ், டேனியல் ஆகியோர் கூட்டு சேர்ந்து அலுவலகமே இல்லாமல் GPR Resources என்ற பெயரில் போலி லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளனர். சொந்தமாக ஒரு கண்டெய்னர் கூட இல்லாத நிலையில் தங்களிடம் ஆயிரக்கணக்கில் கன்டெய்னர்கள் இருப்பதாக … Read more

அமெரிக்கா – ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 புராதன கோயில் சிலைகள் தமிழகம் வருகை

கும்பகோணம்: வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட, தமிழக கோயில்களுக்கு சொந்தமான 10 சிலைகள், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் இருந்த 10 உலோக சிலைகள், டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், … Read more