தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாளை முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை … Read more

சுற்றுலாப் பயணிகள் வருகையால் களைகட்டிய ஒகேனக்கல்

தருமபுரி: ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஒகேனக்கல் களைகட்டியது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை விநாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால், பிரதான அருவியில் மிதமான வேகத்தில் தண்ணீர் விழுந்தது. மேலும், ஆற்றில் நீரின் இழுவை குறைவாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் ஒகேனக்கல்லுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வார இறுதிநாள் என்பதாலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் ஒகேனக்கல்லுக்கு … Read more

அதிக வட்டி தருவதாக ரூ.7 கோடி மோசடி: பணத்தை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை அருகே அதிக லாபத்துடன் கூடிய வட்டி கொடுக்கப்படும் என 7 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியூ ரைஸ் ஆலயம் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் கிளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினால் … Read more

இந்த படத்தைப் பாருங்க… நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துறீங்கணு தெரிஞ்சுக்கோங்க?

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் முதலில் என்ன பார்க்கிறீர்களோ அது நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. என்ன நம்ப முடியவில்லையா சோதனை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஆளுமை சோதனையை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் சில நொடிகளில் நீங்கள் முதலில் என்ன பார்க்கிறீர்களோ அது உங்கள் ஆளுமையையும் நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதைப் கூறுகிறது. அதனால், படத்தை கவனமாகப் பாருங்கள் முதல் பார்வையில் நீங்கள் … Read more

#வாணியம்பாடி || தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி சிறுவன் உயிரிழப்பு.!

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதி சிறுவன் உயிரிழந்து உள்ளார். வாணியம்பாடி அருகே சாலமாபாத் மசூதி பகுதியை சேர்ந்தவர் அயூப்கான். இவரது மகன் ஹாசிப்கான் வயது 17. நேற்று வாணியம்பாடி ரயில் நிலையம் புதூர் அருகே ஹாசிப்கான் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை காட்பாடி செல்லும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சிறுவன் பலியாகியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி … Read more

நபிகள் நாயகத்தை அவமதித்த பாஜக நிர்வாகிகளை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: திருமாவளவன்

சென்னை: உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தும்வகையில், நபிகள் நாயகத்தை அவமதித்தவர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்திலும், சமூக வலைத்தளத்திலும் நபிகள் நாயகமான முகமது நபியை அவமதித்ததால் அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய … Read more

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து! முதலிடத்தில் தமிழ்நாடு! வெளியான அதிர்ச்சி புள்ளிவிபரம்

2020ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நிகழ்ந்த 10 மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நிகழ்ந்த முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. அதேநேரம், முந்தைய 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்துகளை விட 2020ஆம் ஆண்டில் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளன. 2019ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 17,633 விபத்துகள் நிகழ்ந்த நிலையில், … Read more

இந்த ஓவியத்தில் முதலில் என்ன பார்த்தீங்க? உங்கள் துணையிடம் நீங்க வெறுப்பது எது?

நெட்டிசன்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதன் அடிப்படையில் ஒருவரின் ஆளுமையைக் குறிப்பிடுவதால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மற்றும் ஓவியங்கள் சில நேரங்களில் நமக்குத் தெரியாத எண்ணங்களையோ அல்லது நாம் கட்டுப்படுத்த முயற்சிக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தலாம். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம், உங்கள் துணைவரைப் பற்றி நீங்கள் வெறுக்கும் விஷயங்கள் எவை என்று … Read more

உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் எச்சரித்தும் இவர்கள் மட்டும் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது – மருத்துவர் இராமதாஸ்.!

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் உள்ள 49 உதவிப் பேராசிரியர் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட ஆள்தேர்விலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் எத்தனை முறை எச்சரித்தாலும் கூட இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஐ.ஐ.டி நிர்வாகங்கள் மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை ஐஐடி மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ.டிகள், ஐ.ஐ.எம்களிலும் சமூகநீதி … Read more

மகன் தற்கொலையால் மன உளைச்சல்… கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்கள்.!

23 வயது மகன் தற்கொலை செய்து இறந்த துக்கம் தாங்காமல் வயது முதிர்ந்த பெற்றோர் உடலில் துணியை கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர். உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் சமத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி தனலெட்சுமி என்பது விசாரணையில் தெரியவந்தது. 62 வயதான ஆறுமுகம் பொள்ளாச்சியில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணியாற்றி இரண்டு மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். 59 வயதான அவரது மனைவி தனலெட்சுமி காதி கிராப்டில் பணியாற்றி … Read more