#வாணியம்பாடி || தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி சிறுவன் உயிரிழப்பு.!

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதி சிறுவன் உயிரிழந்து உள்ளார்.

வாணியம்பாடி அருகே சாலமாபாத் மசூதி பகுதியை சேர்ந்தவர் அயூப்கான். இவரது மகன் ஹாசிப்கான் வயது 17. நேற்று வாணியம்பாடி ரயில் நிலையம் புதூர் அருகே ஹாசிப்கான் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது ஜோலார்பேட்டை காட்பாடி செல்லும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சிறுவன் பலியாகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.