கெடிலம் | “இறந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் மட்டும் போதாது… விசாரணை தேவை” – அண்ணாமலை

சென்னை: “கெடிலம் ஆற்றில் மணல் எடுத்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கையை எடுக்க வேண்டும்” பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், கெடிலம் ஆற்றில் மணல் எடுத்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கையை எடுக்க … Read more

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்தை ஆவின் நிறுவனம் இன்னும் தயாரிக்கவில்லை – மா. சுப்பிரமணியன்

WHO கொடுத்திருக்கும் வழிகாட்டுதல் படி தான் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்தை ஆவின் நிறுவனம் இன்னும் தயாரிக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மருத்துவ மாணவர்களின் திறன் மேம்பாடு, புத்தாக்க பயிற்சி நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், டீன் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளரிடம் பேசியது, ‘’மருத்துவ சேவைகளை டிஜிட்டல் போர்டு மூலம் தெரிந்துக் கொள்ள மருத்துவமனையில் அவற்றை அமைக்க … Read more

முடி உதிர்வதால் கவலையா? தீர்வு உங்கள் கிச்சன்லேயே இருக்கு.. என்னென்னு பாருங்க!

உங்கள் அழகின் ஒரு முக்கிய அங்கமாக முடி இருக்கிறது. மன அழுத்தம் மற்றும் மாசுபாடு ஆகியவை கூந்தலுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன, இதனால் நம் தலைமுடி உயிரற்றதாகவும், மெல்லியதாகவும், மந்தமாகவும் இருக்கிறது. கூடுதலாக, நீங்கள் உண்ணும் உணவை கவனிக்காமல் இருப்பது உங்கள் முடி வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். விருது பெற்ற ஊட்டச்சத்து நிபுணரான லவ்னீத் பாத்ரா, ஆரோக்கியமான மற்றும் நீண்ட கூந்தலுக்கு உட்கொள்ள வேண்டிய சில இயற்கை ஆதாரங்களை பகிர்ந்துள்ளார். வெந்தயம் வெந்தயம் இரும்பு மற்றும் புரதத்தின் வளமான … Read more

காரைக்குடியில் அரசு துறையில் ப்ராஜெக்ட் அசோசியேட், நிர்வாக உதவியாளர் பதவிகளுக்கான நேர்காணல்.!!

CECRI காரைக்குடி அதிகாரபூர்வ இணையதளத்தில் ப்ராஜெக்ட் அசோசியேட், நிர்வாக உதவியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ஏதேனும் பட்டம், பி.இ, பி.டெக், எம்.எஸ்சி கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சிவகங்கை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : CECRI காரைக்குடி பணியின் பெயர் : ப்ராஜெக்ட் அசோசியேட், நிர்வாக உதவியாளர் கல்வித்தகுதி : … Read more

மகன் இறந்த துக்கம் தாங்காமல் கணவன்-மனைவி இருவர் உடலில் துணியை கட்டிக்கொண்டு கடலில் விழுந்து தற்கொலை

மகன் இறந்த துக்கம் தாங்காமல் கணவன்-மனைவி இருவர் உடலில் துணியை கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் சமத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி என்பது தெரியவந்தது. இதனிடையே தங்களது சொத்துக்களை விற்று மகன் பெயரில் அறக்கட்டளை தொடங்குமாறு இறப்பதற்கு முன்பு உறவினர்களுக்கு அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.  Source link

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை; தமிழக அரசு நிலையை தெளிவுபடுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது … Read more

கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறப்பு – பிரதமர் மோடி இரங்கல்

கடலூர் மாவட்டம் கொடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் ஓடும் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கோடை காலங்களில் தடுப்பணையில் உள்ளூர் மக்கள் குளித்து வரும் நிலையில் சமீபத்தில் பெய்த பருவ மழையினால் அதிக அளவு தண்ணீர் தடுப்பணையில் தேங்கியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அந்த பகுதியை சேர்ந்த … Read more

22வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஃபேல்… வைரலாகும் ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சி!

Rafael Nadal Tamil News: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான “பிரெஞ்ச் ஓபன்” டென்னிஸ் போட்டிகள் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் – நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியது முதலே நடால் புள்ளிகளை கைப்பற்றி வந்தார். இதனால் அவர், முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் வசப்படுத்தினார். ஆனால், 2வது செட்டில் ரூட் அதிரடி காட்டி … Read more

வேதனையுடன் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி.!!

நேற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை  முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். கடலூர் மாவட்டம் ஏ. குச்சிபாளையம், கீழ் அருங்குணம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற … Read more

சென்னை மலர் கண்காட்சி நிறைவு: 3 நாட்களில் 45 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

சென்னை: சென்னை மலர் கண்காட்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றது. கடந்த 3 நாட்களில் 45 ஆயிரம் பேர் மலர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி கடந்த ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்தது. கலைவாணர் அரங்கில் 3 ஆம் தேதி … Read more