மாவட்ட ஆட்சியர் வாட்ஸ்அப் முகப்பு புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் முகப்பு புகைப்படத்தை பயன்படுத்தி அமேசான் கிப்ட் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட வாட்ஸ்அப் எண்ணின் விவரங்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும்  கிருஷ்ணன் உன்னியின்  புகைப்படத்தை முகப்பாக வைத்து கடந்த 1ந்தேதி வாட்ஸ்அப் வாயிலாக ஆட்சியருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள், வி ஐ பிக்கள், பத்திரிகையாளர்கள் என பலருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் அமேசான் கிப்ட் கார்ட் லின்க் அனுப்பி அதன் உள்ளே சென்றால் … Read more

தமிழகத்தில் முதல்முறையாக 12 பேருக்கு பிஏ வகை ஒமைக்ரான் : சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக 8 பேருக்கு பிஏ5 வகை, 4 பேருக்கு பிஏ4 வகை ஒமைக்ரான் கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிடங்கள் கட்டும் பணியை சுகாதாரத் துறை செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் 139 மாதிரிகள் வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் 8 பேருக்கு பிஏ5 வகை, 4 பேருக்கு … Read more

காய்கறிகள், காளான்… சுகர் கண்ட்ரோலில் இருக்க இப்படி சாப்பிடுங்க!

Diabetes patients take these foods to control blood sugar: சர்க்கரை நோய் என்பது ஒரு நீண்ட கால நீடித்த ஆரோக்கிய நிலையாகும், இது உணவை ஆற்றலாக மாற்றும் உடல் செயல்பாட்டை பாதிக்கிறது. உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்றாகும். இந்தியா 77 மில்லியன் நீரிழிவு நோயாளிகளைக் கொண்டுள்ளது, உலகளவில் சீனாவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. டைப்-1 மற்றும் டைப்-2 வகைகளில் நீரிழிவு நோய் பரவலாக உள்ளது, இதில் டைப்-2 அதிகமாக … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்த எரிந்த கார்..!

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கழுந்துவிளை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் குடும்பத்துடன் கடைநயலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து திடீரென புகை வந்தது. உடன்டியாக காரை நிறுத்தி அதில் உள்ளவர்கள் கீழே இறங்கினர், சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீப்பற்றியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறயினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த அம்பவம் குறித்து வழக்குபதிவுச் செய்த காவல்துறையினர் … Read more

12 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர்-காரைக்குடி வழித்தட அகலப்பாதையில் விரைவு ரயில் சேவை..!

திருவாரூர் – காரைக்குடி வழித்தட புதிய அகலப்பாதையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக விரைவு ரயில் சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்ட விரைவு ரயிலானது நேற்று காலை காரைக்குடி, திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் சென்றடைந்தது. மீண்டும் நேற்று மாலை நாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு 7.40 மணியளவில் திருவாரூர் வந்தடைந்தது. பின்னர் பொதுமக்கள் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் மற்றும் செல்வராஜ் எம்.பி, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ ஆகியோர் … Read more

44 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்: தாம்பரம் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 44 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 1996-ல் ஐபிஎஸ் அதிகாரியான அமல்ராஜ், திருப்பூரில்உதவி காவல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கினார். தொடர்ந்து, மதுரை துணை ஆணையர், தருமபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர், ராமநாதபுரம், திருச்சி, சேலம் சரக டிஐஜி, சேலம், கோவை, திருச்சி மாநகர காவல் … Read more

'பிரதமர் மோடிக்கு மேடையிலேயே கிளாஸ் எடுத்ததுதான் திராவிட மாடல்' – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

”ஒட்டுமொத்த தமிழர்களையும் திமுக பக்கம் ஈர்க்கும் நோக்குடன் நாம் செயல்படவேண்டும்” எனக் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். திமுக இளைஞரணி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயம் கலைஞர் அரங்கில் ‘கலைஞர்-99’ கருத்தரங்கு மற்றும்  திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா நடைபெற்றது. திமுக  இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மேடையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”நான் இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று முதல் நிகழ்ச்சி கலைஞர் அரங்கத்தில் இளைஞரணி … Read more

குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மறுப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது. அண்ணாமலை அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பே அதில் முறைகேடு நடந்துள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசுகிறார். முறைகேடு நடந்து இருந்தால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மற்ற துறைகள் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளும் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் … Read more

அதிமுக-பாஜக மோதல்…., முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை.!

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், அதிமுக -பாஜக நிர்வாகிகள் மாறி மாறி ஒருவரை விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி, தேசிய அளவிலான பிரச்சினைகளில் பாஜகவோடு அதிமுக நிற்கிறது. பொன்னையன் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி கே பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.  … Read more

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர், டானிக் கொள்முதலில் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

கர்ப்பிணிகளுக்கான தாய் – சேய் நல பெட்டகத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக்கை ஆவினை நிராகரித்து தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்படுகிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கர்ப்பிணிகளுக்கான தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், இடம் பெற்றுள்ள தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பவுடரை தனியார் நிறுவனத்துக்கு பதிலாக … Read more