'பிரதமர் மோடிக்கு மேடையிலேயே கிளாஸ் எடுத்ததுதான் திராவிட மாடல்' – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

”ஒட்டுமொத்த தமிழர்களையும் திமுக பக்கம் ஈர்க்கும் நோக்குடன் நாம் செயல்படவேண்டும்” எனக் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். திமுக இளைஞரணி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயம் கலைஞர் அரங்கில் ‘கலைஞர்-99’ கருத்தரங்கு மற்றும்  திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா நடைபெற்றது. திமுக  இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மேடையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”நான் இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று முதல் நிகழ்ச்சி கலைஞர் அரங்கத்தில் இளைஞரணி … Read more

குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மறுப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது. அண்ணாமலை அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பே அதில் முறைகேடு நடந்துள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசுகிறார். முறைகேடு நடந்து இருந்தால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மற்ற துறைகள் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளும் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் … Read more

அதிமுக-பாஜக மோதல்…., முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை.!

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், அதிமுக -பாஜக நிர்வாகிகள் மாறி மாறி ஒருவரை விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி, தேசிய அளவிலான பிரச்சினைகளில் பாஜகவோடு அதிமுக நிற்கிறது. பொன்னையன் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி கே பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.  … Read more

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர், டானிக் கொள்முதலில் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

கர்ப்பிணிகளுக்கான தாய் – சேய் நல பெட்டகத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக்கை ஆவினை நிராகரித்து தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்படுகிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கர்ப்பிணிகளுக்கான தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், இடம் பெற்றுள்ள தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பவுடரை தனியார் நிறுவனத்துக்கு பதிலாக … Read more

வன்மத்தோடு சுற்றும் கும்பலுக்கு பதிலடி கொடுத்த கபில்தேவ்.!

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் மகன்களாக இருப்பது வரமும், சாபமும் போன்றது என்று, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் எந்த தவறும் செய்யாமலேயே, அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வருகிறார். கதவை கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்பதுபோல், அவர் மீது வன்மத்துடன் ஒரு கும்பல் இருந்து வருகிறது.  வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்டிங் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர் ஆன அர்ஜுன் … Read more

உக்ரைனில் படித்த மாணவர்களில் கல்விக்கடன் ரத்து பற்றி ஆய்வு: சு.வெங்கடேசன் எம்.பி.கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில்

சென்னை: உக்ரைனில் இந்திய மாணவர்களில் கல்விக்கடன் ரத்து பற்றி ஆய்வு செய்யப்படும் என்று சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி கடந்த மார்ச் மாதம் மதுரை எம்பி சு.வெங்கடேசன் எம்.பி. மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார். இந்த மத்திய இணை அமைச்சர் டாக்டர் பகவத் கரத் பதில் அளித்துள்ளார். அந்த பதில் கடிதத்தில், … Read more

குரங்கு அம்மை யாரைத் தாக்கும் ?

Who is protected against monkeypox?,கொரோனா வைரஸ்  தொற்றிலிருந்து இன்னும்  உலக மக்கள் மீண்டு வராதா நிலையில் தற்போது குரங்கு அம்பை பாதிப்பு மக்களை மேலும் பயத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில் யாரை குரங்கு அம்மை நோய் தாக்கும் என்ற கேள்வியும். நாம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியும். எழுதுள்ளது. இதற்கான விரிவான தகவல்களை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். 6 மாதத்திற்கு குறைவாக உள்ள குழந்தைகள்  இந்த நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் குரங்கு … Read more

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படுபவர் யார்.? இன்று அவருடைய பிறந்த தினம்.!

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் இந்திய முஸ்லீம் தலைவர்களுள் ஒருவரான முகம்மது இசுமாயில் 1896ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார்.  இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.  மேலும், இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராகவும், சட்டசபை உறுப்பினராகவும் (1946-52), டெல்லி மேலவை உறுப்பினராகவும் (1952-58), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1962, 1967, 1971) பதவி வகித்துள்ளார்.  … Read more

உலக சுற்றுச்சூழல் தினம் | நமக்கு இருக்கும் ஒரே உலகத்தை காக்க பாடுபடுவோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நமக்கு இருக்கும் ஒரு உலகத்தை காக்க பாடுபவோம் என்று தனது உலக சுற்றுச்சூழல் தின செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையோட்டி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் மஞ்சப்பை, பசுமைத் தமிழகம் இயக்கம், முதன்முறையாக பசுமை காலநிலை மாற்றம் நிறுவனம், என்னும் சிறப்பு நோக்க வாகனம் உள்ளிட்ட பல இயற்கைப் பாதுகாப்பு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. உலகச் சுற்றுச்சூழல் நாளில் நமக்கு … Read more