அடகு வைத்த நகைகள் மாயம்.. மாற்று நகை வழங்கிய வங்கி ஊழியர்கள்.. பணியிடை நீக்கம் செய்த இணைப்பதிவாளர்.!

புதுக்கோட்டை அருகே தனது சொந்த தேவைகளுக்காக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 159 புள்ளி 800 கிராம் நகைகளை கையாடல் செய்த நகை மதிப்பீட்டாளர் மற்றும் வங்கி செயலாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்திருந்த 4 சவரன் நகையை மீட்க வாடிக்கையாளர் ஒருவர் வந்த நிலையில், அவரது நகைகள் மாயமானது தெரிய வந்தது. … Read more

“சத்குருவின் பயணம் பாரத மண்ணின் வலிமையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்

கோவை: மண் வளத்தினை மீட்டெடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சத்குரு மேற்கொண்டுள்ள மோட்டர் சைக்கிள் பயணம், பாரத மண்ணின் வலிமையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நடைபெற்ற மண் காப்போம் இயக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு தனது மனமார்ந்த ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இந்த இயக்கம் மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவையாற்றும். “சத்குரு மேற்கொண்டுள்ள 30,000 … Read more

'அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கருத்துக்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானவை' – அண்ணாமலை

”அதிமுகவை சேர்ந்த சில இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை பற்றி பாஜக கவலைப்படாது” எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.   தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”கர்ப்பிணிகளுக்கு ஹெல்த் மிக்ஸ் என்ற பெயரில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவதில் அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பொருட்களை கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க முயற்சி செய்துள்ளனர். இதற்காக 450 கோடி … Read more

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: பாஜக செய்தித் தொடர்பாளர்கள் சஸ்பென்ட்; அனைத்து மதங்களையும் மதிக்கிறோம்

முஹம்மது நபியைப் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு இன்று காலை பதிலளித்த பாஜக, ‘அனைத்து மதங்களையும் மதிக்கிறோம்’ என்றும், ‘எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது’ என்றும் பாஜக கூறியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி, தனது செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்தது. நூபுர் சர்மாவுக்கு … Read more

#சென்னை || சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடிப்பு.!

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சென்னையில் கணேசன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கிய டொயோட்டா இனோவா காரில் உறவினர் வீடு இருக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இன்ஜின் பகுதியில் திடீரென பலத்த சத்தம் கேட்டு, உடனடியாக கார் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கணேசன் காரில் இருந்து வெளியேற முயன்றபோது காரின் ஸ்மார்ட் லாக் தானாக இயங்கி காரின் கதவுகள் மூடி கொண்ட நிலையில் புகை வந்ததும் காரின் கதவு … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.!

தூத்துக்குடி சங்கரன்கோவில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கழுந்துவிளையை சேர்ந்த பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் கடையநல்லூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். மேலநீலிதநல்லூர் வழியாக சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தி உள்ளே இருந்த 6 பேரும் கீழே இறங்கியுள்ளனர். சிறிது நேரத்திலேயே கார் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்துள்ளது. Source link

முதல் தர கல்வி முழுமையான வளர்ச்சி | இலட்சினை, பேட்ஜ்: சென்னை பள்ளிகளை மேம்படுத்தும் மாநகராட்சி  

சென்னை: “முதல் தர கல்வி முழுமையான வளர்ச்சி” என்பதை நோக்கமாகக் கொண்டு சென்னை பள்ளிகள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தாண்டு பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 119 தொடக்கப் பள்ளி, 92 நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 291 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க சென்னை மாநகராட்சி கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை … Read more

தாங்க முடியாத வெப்பம் – சென்னை மெரினா கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அண்ணா சமாதி முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள நான்கு கிலோமீட்டர் இணைப்பு சாலையில் பொதுமக்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், மாநகராட்சி நீச்சல் குளம், கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது. அதிகப்படியான மக்கள் வருகையின் காரணமாக காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடற்கரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை வாரா … Read more

கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

7 people died due to drowned into river in cuddalore CM announced financial assistance: கடலூரில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்க சென்ற 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் ஏ.குச்சிபாளையம் பகுதியில், இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷினி, நவநீதம் ஆகியோர் அருகிலுள்ள கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் … Read more

தினம் தகராறு.. குடும்ப பிரச்சனையால் தாய் மகள் செய்த விபரீத செயல்.. கும்பகோணம் அருகே நிகழ்ந்த சோகம்..!

குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் . இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். அன்பழகம் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், மகாலெட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராணி அவரது தாயார் மீனாட்சி ஆகிய … Read more