இந்தியாவை அதிரவைத்த விளம்பரம்.! ஆபாசத்தின் உச்சம்., பாலியல் வன்கொடுமை., இரட்டை வசனம்.! 

வாசனை திரவிய விளம்பரம் ஒன்றில், பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விதமாகவும், அதனை இளைஞர்களை இரட்டை அர்த்தத்தில் பேச வைத்து, நடிக்க வைத்து எடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்று, பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு 88 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி விவரம் தெரிவிக்கிறது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் சிறுமி ஒருவர் அரசியல் பிரமுகர்களின் மகன்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது. இந்த … Read more

சென்னையில் அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து.!

சென்னையை அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து பட்டாபிராம் தண்டுரை மேம்பாலம் வழியாக சென்ற சமயத்தில், இரு சக்கர வாகனம் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்ணாலை பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருமங்கலத்தில் பாஜக சார்பில் 500 துப்புரவுபணியாளர்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, அரிசி, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதேபோல, கள்ளிக்குப்பத்தில் உள்ள … Read more

சேலம்: தெருவில் செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கும் வெறிநாய்: 10-க்கும் மேற்பட்டோர் காயம்

மேட்டூர் அருகே வெறிநாய் கடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில், மூன்று சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த வீரக்கல் புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வெறிநாய் கடித்ததில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடுமையான பாதிப்படைந்துள்ளனர். இதில் 3 பேர் குன்னூரில் உள்ள வெறிநாய் கடிக்கான மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க சென்றுள்ளதாகவும் இன்னும் சில பேர் மருத்துவமனையில் ஊசி போட்டுக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் … Read more

காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு : நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சபாநாயகர்

Three kids die of suffocation inside parked, பணகுடி  அருகே காருக்குள் விளையாடிய குழந்தைகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு நித்திஷா  என்ற 6 வயது மகளும், நித்திஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளும் பகத்துவீட்டில் வசிக்கும் சுதன் என்பவரின் 4 வயது மகன் கபி சாந்தும் தினமும் ஒன்றாக விளையாடுவது வழக்கம். … Read more

#சென்னை || அரசுப் பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்து.! ஒருவர் உயிரிழப்பு.!

சென்னையில் அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி சென்ற அரசு பேருந்து பட்டாபிராம் தண்டுறை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்த … Read more

11 அடுக்கு – 794 அறைகள்.. அசர வைக்கும் சொகுசு கப்பல் சுற்றுலா..!

தமிழகத்தில் முதன் முறையாக சுற்றுலா பயணிகளுக்கான சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கார்டிலியா சொகுசுக் கப்பலின் சிறப்பம்சங்களை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு… சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை 2 நாட்களும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் வழியே புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் வரை 5 நாட்களும் பயணிக்கும் வகையில் இந்த சொகுசுக் கப்பல் இயக்கப்படவுள்ளது. 11 அடுக்குகள் கொண்ட இந்த … Read more

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட ஆட்சியர், பள்ளிகளுக்கு பசுமை விருது – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியமைக்காக மதுரை, விழுப்புரம், திருவண்ணாலை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு சாரா நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பசுமை விருதுகளை வழங்கினார். மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக, ரூ.3.42 கோடி மதிப்பில் 25 மின் வாகனங்களையும் முதல்வர் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நலமாக, … Read more

சென்னை: நண்பர்களோடு கடலில் குளித்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நண்பர்களுடன் கடலில் குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை தண்டையார்பேட்டை நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஏஜாஸ் (17). இவர், சென்னை ஆர்கே நகர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது நண்பர்களுடன் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் குளித்தார். அப்போது முகமது ஏஜாஸ் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனார். இதுகுறித்து … Read more