சுகர் இருக்கா? கோடையில் உங்களுக்கு உதவும் 3 ட்ரிங்க்ஸ்!

Tami Health Drinks For Diabetes Patients : கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலை மனதில் வைத்து பலரும குளிர் பிரதேசத்தை நோக்கிய படை எடுப்பார்கள். இன்னும் சிலர் குளிர்ச்சியான பானங்களை தங்களது உணவுப்பட்டியலில் முன்னணியில் வைப்பார்கள். ஆனால் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் குளிர்பாணங்களை எடுத்துக்கொள்ளும்போது அதிக கவனம் தேவை. குளிரூட்டிகள், பழச்சாறுகள் மற்றும் பிற பானங்கள் போன்ற எதையும் மற்றவர்கள் உட்கொள்ளலாம். ஆனால் இந்த பானங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது அல்ல. நீரிழிவு நோயாளிகள் … Read more

சென்னையின் அதிமுக்கிய பிரச்சனை., பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் நாளை வெளியிட உள்ள வரைவு அறிக்கை.!

பசுமைத் தாயகம் சார்பில், ‘சென்னை தூய காற்றுச் செயல் திட்டம்’ வரைவு அறிக்கையை நாளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிடுகிறார். காற்று அனைவருக்கும் பொதுவானது. ஏழை, பணக்காரர், மதம், மொழி என மக்களின் அடையாளங்கள் வேறுபட்டாலும் நாம் எல்லோரும் ஒரே காற்றை தான் சுவாசிக்கின்றோம். தூய காற்று ஒரு அடிப்படை மனித உரிமையும் கூட. ஆனால், இன்று நகர்ப்புறங்களில் தூய காற்று காணக்கிடைக்காத அதிசயம் ஆகிவிட்டது. பெருநகரங்களில் வானம் அதன் நீல நிறத்தை இழந்துவிட்டது! உயரைக் காக்கும் … Read more

செருப்பால் சிக்கிய கொள்ளையர்கள்.. தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது.. 32 சவரன் நகை பறிமுதல்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை அவர்கள் அணிந்த செருப்பை அடையாளமாக வைத்து போலீசார் கைது செய்தனர். சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டுகள் அரங்கேறி வருவதாக வந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரே கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனிடையே, முத்துக்கவுண்டன் புதூர் அருகே வாகன தணிக்கையின் போது அவ்வழியாக வந்த 3 பேர், போலீசாரை கண்டு தப்பியோடிய நிலையில் … Read more

கோவையில் ‘ஸ்விகி’ ஊழியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவலர் கைது – பணியிட நீக்கம் செய்த கமிஷனர்

கோவை: பீளமேடு அருகே, ‘ஸ்விகி’ உணவு விநியோக நிறுவனத்தின் ஊழியர் ஒருவரைத் தாக்கிய போக்குவரத்துக் காவலர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அதிரடியாக கைதும் செய்யப்பட்டுள்ளார். கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (38). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவக விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மோகனசுந்தரம் குடும்பத்தினருடன், சின்னியம்பாளையத்தில் ஸ்டேஷனரி கடை நடத்தி வந்தனர். ஆனால், கரோனா தொற்று காலத்தில் போதிய வியாபாரம் இல்லாமல் அந்தக் … Read more

திண்டுக்கல்: நீர்த்தேக்க அணை தண்ணீரில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

ஆத்தூர் நீர்த்தேக்க அணை தண்ணீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அப்பகுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் வேல்முருகன் பெரியகுளத்தில் குடியிருக்கிறார். இவரது மகள் தர்ஷினி(15) பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தற்போது விடுமுறை என்பதால் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் … Read more

புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் கண்காட்சி: தஞ்சையில் தொடக்கம்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, வீணை, கலைத் தட்டு உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் தொடர்பாக இரண்டு நாள் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு கைவினைப் பொருள்கள் மற்றும் இரண்டு இசைக் கருவிகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இப்புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் சிறப்பை பொதுமக்கள் அறியும் வகையிலும்  அவற்றிற்குரிய சந்தையை உருவாக்கும் வகையிலும் தஞ்சாவூர் இராஜராஜன்  மணிமண்டபத்தில் இரண்டு நாள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு்ளளது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட … Read more

#தமிழகம் || கார் வைத்திருக்கும் பெற்றோர்களே உஷார்…, நெல்லை அருகே 3 குழந்தைகள் கொடூரமாக பலியான சோகம்.! 

நெல்லை: பணகுடி லெப்பை குடியிருப்பு பகுதியில் காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள், காருக்குள்ளேயே சிக்கி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. லெப்பை குடியிருப்பு கிராமத்தில் நாகராஜன் என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக, தனக்கு தெரிந்தவரிடம் கார் ஒன்றை வாங்கி வந்துள்ளார். வீட்டின் முன்பு அந்த கார் நின்றுகொண்டிருந்தது. இந்த காரில் இவருடைய மகன் மற்றும் மகள், பக்கத்து வீட்டை சேர்ந்த குழந்தை என மூன்று பேரும் … Read more

வீடு கட்டும் பணியின் போது பழைய சுவர் இடிந்து விபத்து.. 3 தொழிலாளர்கள் படுகாயம்.!

தூத்துக்குடியில் வீடு கட்டும் பணியின் போது அருகில் இருந்த பழைய சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். டி.ஆர்.நாயுடு தெருவில் பாலு என்பவரின் புதிய வீடு கட்டும் பணியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  Source link

திருநெல்வேலி அருகே சோகம்: காருக்குள் மூச்சுத்திணறி 3 குழந்தைகள் உயிரிழப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகள் கதவை திறக்க தெரியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு பாலகர்பள்ளி தெருவை சேர்ந்த நாகராஜ் – அருணா தம்பதியரின் குழந்தைகள் நித்திஷ் (7), நிதிஷா (5), சுதன் – தபிஷா தம்பதியரின் மகன் கபிசந்த் (4) ஆகியோர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகராஜனின் அண்ணன் மணிகண்டனின் காரில் விளையாடிக்கொண்டிருந்தனர். கார் … Read more

ஓராண்டில் திமுக ஆட்சி: பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை எப்படி சமாளித்தீர்கள்? #PTsurvey

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. ஓராண்டில் திமுக ஆட்சி குறித்த கருத்துக்கணிப்பை புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தியது. அதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், தலைமையின் செயல்பாடுகள் மற்றும் மக்களை கவர்ந்த திட்டங்கள் என்னென்ன? மக்களுடைய மதிப்பீடு என்னென்ன? என்பது குறித்த கேள்விகளும், எதிர்க்கட்சிகளுடைய செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன? எந்தெந்த தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருக்கிறது? இளைஞர்கள் மத்தியில் எந்தெந்த தலைவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் இந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளன. … Read more