தமிழ்நாட்டின் டாப் 3 தலைவர்கள் யார்? புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்

Tamilnadu top leader and DMK govt functionalities survey results: தமிழ்நாட்டில் சிறந்த தலைவர்கள் யார் என தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவுப்பெற்றுள்ள நிலையில், ஆட்சியை பற்றி மக்கள் மனநிலை, தலைமையின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட்டன, தற்போதைய நிலையில் மக்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் போன்ற கருத்துக் கணிப்புகளை, தமிழ்நாட்டின் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் ஒன்றான புதிய தலைமுறை … Read more

பாஜகவுக்கு கூடுவது காக்கை கூட்டம் – செல்லூர் ராஜு காட்டம்.!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, “தமிழக மக்களுக்காக என்றுமே அதிமுக சேவை செய்கின்ற ஒரு இயக்கமாகும். தமிழகத்தைப் பொருத்தவரை எப்போதும் அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான கட்சிகள். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக பலவகைகளில் அரசியல் செய்து வருகிறார்.  முன்பு பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பாக பணியாற்றியிருந்தார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது … Read more

நண்பர்களுடன் கடலில் குதித்து மாணவன் நீரில் மூழ்கிய நெஞ்சை பதற வைக்கும் காட்சி..! இது விபரீதத்தின் உச்சம்..!

காசிமேடு கடலில் நண்பர்களுடன் குளிப்பதற்காக குதித்த பாலிடெக்னிக் மாணவன் நீச்சல் தெரியாமல் தத்தளித்து மூழ்கும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கூடா நட்பு கேடாய் முடிந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. தண்டையார்பேட்டை, நேரு நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஏஜாஸ் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள சிமெண்டு வார்ப்பு பகுதியில் குளிக்க சென்றார். அப்போது, 3 நண்பர்களுடன் … Read more

சென்னை-புதுச்சேரி சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் – கட்டண விவரம், பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். ‘கோர்டிலியா குரூஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொகுசு கப்பல் சுற்றுலா … Read more

`ஆதீன பாரம்பரியங்களில் இந்து அறநிலையத் துறை தலையிடாது’- அமைச்சர் தகவல்

‘சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை’ என்று மயிலாடுதுறையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு நேற்று சென்றிருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற அமைச்சர், ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் … Read more

அடிக்கும் வெயிலுக்கு இதமான வெண்டைக்காய் மோர்க்குழம்பு ரெசிபி!

மோரில் வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டை தணிக்கும். அதேபோல, வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. இப்படி ஆரோக்கிய … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி பயணம்.!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி செல்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து காலையில் விமானம் மூலம் புறப்படும் அவர், மதியம் கோவை விமான நிலையத்திற்கு சென்றடைகிறார்.  அதன் பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு மாலை 5.30 மணிக்கு செல்கிறார். அதன்பிறகு ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். மேலும், வருகிற 9-ந்தேதி வரை ஊட்டியில் ஆளுநர் இருக்கிறார்.  ஆனால் … Read more

படிச்சுட்டுதான், வேலைக்கு வந்துருக்கோம்.. மரியாதை இல்லாமல் அடிக்கிறார்கள்..!

கோவையில் ஸ்விக்கி நிறுவன ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியோ காட்சி வெளியான நிலையில், அந்த காவலரை கைது செய்தும் பணி இடை நீக்கம் செய்தும் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  கோவை மாவட்டம் நீலாம்பூரை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரியான மோகன சுந்தரம் என்பவர் ஸ்விக்கியில் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இவர் நேற்று, தனது இருசக்கர வானத்தில் சென்றபோது, போக்குவரத்து காவலரான சதீஷ் என்பவர், பளார் என கன்னத்தில் அறைந்ததுடன், வாகன சாவியையும் கைப்பற்றினார். இந்த … Read more

13 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 5, 6-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் … Read more