'பீகார் தொழிலாளர்களை துன்புறுத்தும் திமுக' பிரதமர் மோடி பேச்சு – ஸ்டாலின் கண்டனம்!
MK Stalin: பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் திமுகவினரால் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
MK Stalin: பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் திமுகவினரால் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்: பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், தனது கட்சியினருடன் கூட்டமாக மரியாதை செலுத்த வந்தார். அப்போது, அங்கிருந்த பூசாரி மற்றும் நினைவிட நிர்வாகிகள், “மரியாதை செலுத்திவிட்டு சீக்கிரம் கிளம்புங்கள்” என்று கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர்வாண்டையார், அங்கு நின்று கொண்டிருந்த நினைவிட நிர்வாகியான அழகுராஜாவை திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, நினைவிட நிர்வாகிகள், பூசாரிகள் அனைவரும் … Read more
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவிமரியாதை … Read more
சென்னை: தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர் கோரப்படும் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். ‘விண்டர்ஜி இந்தியா 2025’ என்ற 7-வது சர்வதேச வர்த்தக கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை செயலாளர் ராஜேஷ் குல்ஹாரி … Read more
சென்னை: தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே நடைபெறாத சாதிய மோதல்கள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் ‘யுடிஐஎஸ்இ பிளஸ்’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. கல்வித் துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. 2020-21-ல் தொடக்கப் பள்ளிகளில் 0.6 சதவீதமாக … Read more
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் பசும்பொனில் ஒரே மேடையில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை: எஸ்ஐஆர் திருத்தத்தை எதிர்த்து நடத்தப்படவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி தரப்பு) தவிர 60 கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகம் உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த அக். 27-ம் தேதி வெளியிட்டு, பணிகளைத் தொடங்கியது. இந்த சிறப்பு வாக்காளர் குறித்த திருத்தத்துக்கு திமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் … Read more
திருநெல்வேலி: லண்டனில் படித்து வந்த மாணவியை வரவழைத்து திருநெல்வேலி வாலிபர் காதல் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை எதிர்த்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது. வந்தால் அதுகுறித்து பதில் சொல்கிறேன் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி, 63-வது குருபூஜையையொட்டி தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், எம்.மணிகண்டன், காமராஜ், விஜயபாஸ்கர், செல்லூர் … Read more
திண்டுக்கல் மாவட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் தயாரிக்கும் பணி நவம்பர் 4ல் துவக்கம் – ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை அதிகாரிகள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.