மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தை தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு
சென்னை: மின்மாற்றிகளை நுகர்வோரே வாங்க மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது.தமிழத்தில் தற்போது 3.36 கோடி மின்நுகர்வோர் உள்ளனர். உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள துணை மின்நிலையங்கள் வாயிலாக அந்த குறிப்பிட்ட பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நேரடி மின்னோட்டமாக செல்லும் மின்சாரத்தை மாற்று மின்னோட்டமாக மாற்ற மின்மாற்றிகள் பயன்படுகின்றன. ஒரு சில இடங்களில் புதிதாக மின்மாற்றி அமைக்க வேண்டிய நிலை … Read more