“கோவை உயர்மட்ட பாலத்தின் 55% பணிகள் நிறைவுற்றது அதிமுக ஆட்சியில்தான்” – பழனிசாமி பேச்சு

திருச்செங்கோடு: “அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் ரூ.1621 கோடியில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பணிகள் 55% நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் போட்டனர். அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்று கிடப்பில் போட்டு, இப்போது ஸ்டாலின் திறக்கிறார்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில், திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட கரட்டுபாளையம் பகுதியில் திருச்செங்கோடு – பரமத்தி சாலையருகே திறந்தவெளி மைதானத்தில் நடந்த … Read more

TVK Vijay: கரூர் விவகாரம்! தமிழக வெற்றிக் கழகம் எடுத்த அதிரடி முடிவு!

விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தனியார் நிறுவனத்தை மூட நடவடிக்கை: இருமல் மருந்து விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருநெல்வேலி: இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையை சட்டப்படி ரத்து செய்து, நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்தியப் பிரதேச மாநிலம், சிந்து வாரா மாவட்டத்தில் குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாகக் கருதப்படும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து … Read more

பீகாரை போல்.. தமிழ்நாட்டிலும் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம்.. கே.என். நேரு எச்சரிக்கை!

KN Nehru: பாஜகவின் நடவடிக்கைகளுக்கு துணை போவதாக தேர்தல் ஆணையம் மாறிவிடக்கூடாது என கே.என். நேரு தெரிவித்துள்ளார்.  

தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கரூர் நீதிமன்றம்

கரூர்: தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். … Read more

பெற்றோர் இல்லா குழந்தைகளை தீபாவளி ஷாப்பிங் அழைத்துச்சென்ற வழக்கறிஞர், குவியும் பாராட்டு

பெற்றோர் இல்லா குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி வழக்கறிஞர் ஒருவர் புத்தாடை வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் விவகாரத்தில் அவசர கோலத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது: அப்பாவு கருத்து

திருநெல்வேலி: “கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அடிப்படையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது, யாரையும் பழிதீர்க்கும் அவசியமும் கிடையாது” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் கல்லூரி மாணவிகளுக்கான ஹாக்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டுத் துறையில் புரட்சி … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் விடுதலை ஆனது எப்படி? அன்புமணி சொல்லும் பாயிண்ட்!

Anbumani Ramadoss: குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். 

எஸ்.ஐ, தீயணைப்புத் துறை காலி பணியிட இறுதி தேர்வு பட்டியலை வெளியிட ஐகோர்ட் 30 நாட்கள் கெடு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப்பட்டியலை 30 நாட்களில் வெளியிட தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கும், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், கடந்த 2023 ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. எழுத்துத் … Read more

அடிச்சு ஊத்தப்போகுது.. நாளை இந்த 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

Tamil nadu weather update: நாளை (அக்டோபர் 09) வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.