தமிழ்நாட்டின் இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – எங்கெல்லாம் தெரியுமா?

Tamil Nadu Rain Forecast: தமிழ்நாட்டின் இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 2 மாவட்டங்களில் கனமழைக்கும் நாளை (மே 30) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தேமுதிகவுக்கு அதிமுக ஒரு சீட் வழங்காவிட்டால்…” – பிரேமலதா விஜயகாந்த்

புதுக்கோட்டை: “தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட … Read more

கமல்ஹாசனை மிரட்டும் கன்னடர்கள்: முதலமைச்சர் வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? சீமான் கேள்வி!

‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்: பின்னணி என்ன?

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 1-ம் தேதி கட்சிப் பொதுக்குழுவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல், அதற்கு போட்டியாக அதிமுக கவுன்சிலர்கள் துணையுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியதற்கு மூளையாக செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே மோதல்.. மதுரை மாநகராட்சி திமுக மேயராக இந்திராணி … Read more

அதிமுக கவுன்சிலரை ஓங்கி அறைந்த திமுக பெண் கவுன்சிலர்.. சேலத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலரை திமுக பெண் கவுன்சிலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

‘நடிகர் ராஜேஷ் சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டியவர்’ – முத்தரசன் புகழஞ்சலி

சென்னை: மார்க்சிசம் – லெனினிசக் கொள்கை மீது பற்றுக் கொண்டவர் மறைந்த நடிகர் ராஜேஷ், அந்த கொள்கை வலுப்பெற வேண்டும் என அக்கறை காட்டிய செயல்பாட்டாளர் என்று முத்தரசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: “தமிழ் திரையுலகில் தனி முகமாக விளங்கிய நடிகர் ராஜேஷ் (75) இன்று (29.05.2025) காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் அணைக்காட்டை பூர்வீகமாக கொண்ட வில்லியம் – வில்லி கிரேஸ் தம்பதியர் மன்னார்குடியில் வாழ்ந்த … Read more

தமிழ்நாடு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள், பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ்

Tamilnadu Government : சென்னையில் டிஜிட்டல் விளம்பரம் செய்வது தொடர்பாகவும், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இரண்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

கட்சி நன்கொடை அறிக்கை: தமாகா மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். … Read more

பாஜகவுடன் கூட்டணி வைக்குமாறு அன்புமணி, சவுமியா அன்புமணி கெஞ்சினர் – ராமதாஸ்

Ramadoss, Anbumani Ramadoss : அன்புமணி ராமதாஸ் மீது சரிமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் தைலாபுரத்தில் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

நடிகர் ராஜேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமான நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 திரைப்படங்கள் மற்றும் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்ததோடு, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ் . கலைஞர் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டு விளங்கினார். அவரும், ராஜேஷின் திருமணம் … Read more