விழுப்புரம் ரயில்வே இடத்தில் 44 வீடுகள் அகற்றம் – ஆக்கிரமிப்பால் நடவடிக்கை
விழுப்புரம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி, விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையையொட்டி ரயில்வே இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 வீடுகள் இன்று (அக்.8) அகற்றப்பட்டன. விழுப்புரம், பவர் ஹவுஸ் சாலையின் நடுவே மாரியம்மன் கோயிலும் மற்றும் சாலையை ஒட்டியுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 44 வீடுகள் இருந்தது. இதில் 43 ஓடு மற்றும் சிமென்ட் ஷீட் வீடுகளும், ஒரு கான்கிரீட் வீடும் அடங்கும். 50 ஆண்டுக்கு மேலாக, 44 வீடுகளிலும் 3-வது தலைமுறையாக பலரும் வசித்தனர். … Read more