“பிறரை குறைசொல்லி வாக்கு சேகரித்தால் வரும் பாதகத்தை உணர்ந்தவன் நான்”- ராஜேந்திர பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையின்போது, யாரையும் குறை சொல்லி வாக்கு கேட்க வேண்டாம் எனவும், அதன் பின்னணியை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் தான் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய 48 அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். கூட்டத்துக்குப் … Read more

TNPSC நிரந்தரப் பதிவுடன் ஆதார் இணைப்பு அவசியம்; தேர்வாணையம் அறிவிப்பு

TNPSC announce link aadhaar to OTR is mandatory: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நிரந்தர கணக்கு வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 28-ம் தேதிக்குள், நிரந்தர பதிவுடன் ஆதார் விவரங்களை இணைத்திருக்க வேண்டும் என தேர்வாணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. TNPSC-யில் நிரந்தரப் பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில், மீண்டும் ஆதார் இணைப்பை … Read more

செல்போனால் விளைந்த விபரீதம்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்..!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவருடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்ப்பட்டது. செல்போனில் அந்த சிறுமியுடன் தொடர்ந்து பேசிவந்த அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி சிறுமியை திடீரென காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் … Read more

பாறை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்க இத்தனை லட்சம் செலவு செய்யப்பட்டதா !!

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த செரடு பகுதியை சேர்ந்தவர் பாபு (23 ). மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட பாபு, கடந்த 7ஆம் தேதி தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியில் உள்ள மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறும்போது, கால் தவறி கீழே விழுந்தார். எனினும் நல்வாய்ப்பாக செங்குத்தான பாறை ஒன்றின் இடையே சிக்கி கொண்டார். அங்கிருந்தபடி தன்னை மீட்கும்படி வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு தகவல் அனுப்பினார். அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பாபுவை மீட்க முயன்றனர். … Read more

வழிப்பறி செய்ய முயன்று இளைஞரின் தலையை துண்டித்த கும்பல் ; தலையைத் தேடும் போலீசார் <!– வழிப்பறி செய்ய முயன்று இளைஞரின் தலையை துண்டித்த கும்பல் ;… –>

திருப்பூரில் நண்பர்கள் இருவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற கும்பல், அவர்களில் ஒருவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. செரங்காடு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் கூச்சலிட்டபடியே ஓடி வந்துள்ளார். அப்பகுதி மக்கள் விசாரித்தபோது தன்னுடன் வந்த நண்பர் சதீஷ் என்பவரை ஒரு கும்பல் அங்குள்ள காலி மைதானத்தில் வைத்து தாக்கிக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார். பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்ட சதீஷின் … Read more

மதுரை: 41-வது முறையாக கரோனா நிதிக்கு ரூ.10,000 வழங்கிய யாசகர்!

மதுரை: மதுரையில் யாசகர் பூல்பாண்டியன் கரோனா பேரிடர் நிதிக்கு, மாவட்ட ஆட்சியருக்கு 41-வது முறையாக 10,000 ரூபாயை நிவாரணமாக வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான் யாசகமாக பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார். கரோனா தொற்று காலத்தில், தனது சேமிப்பிலிருந்து ரூ.10,000-ஐ பலமுறை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நிவாரணமாக வழங்கி வந்தார். தனது சேவை காரணமாக பொதுமக்களால் யாசகர் … Read more

மயிலாடுதுறை: காதலர் தினத்தில் கல்யாணம் முடிந்த கையோடு எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்த ஜோடி

காதலர் தினத்தில் திருமணம் செய்துகொண்டு எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த தம்பதியினருக்கு பாதுகாப்பு அளிக்க எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே சீர்காழி மாதானத்தை சேர்ந்த சிவசண்முகம் என்பவர், குமரக்கோட்டம் பகுதியைச் சேர்ந்த விஜய லட்சுமி என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தங்களது பெற்றோரிடம் திருமணம் செய்துவைக்க கேட்டதற்கு விஜயலட்சுமியின் வீட்டார் மறுத்துவிட்டனர். இந்நிலையில், இன்று காலை இருவரும் வைத்தீஸ்வரகோயில் மாரியம்மன் சன்னதிக்குச் சென்று மாலை மாற்றி தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். … Read more

செய்தி நிறுவன அலுவலகத்தில் புகைப்பட பத்திரிக்கையாளர் டி.குமார் தற்கொலை

Chennai photojournalist T Kumar found dead in newsroom, suicide suspected: சென்னையில் உள்ள செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த புகைப்பட பத்திரிக்கையாளர் டி குமார் நேற்று இரவு அலுவலகத்தில் இறந்து கிடந்ததாக அந்த அமைப்பின் வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் குமாரின் உடலை சக ஊழியர் ஒருவர் கண்டெடுத்தார். தகவலின் பேரில், போலீஸார் அங்கு வந்து புகைப்படப் பத்திரிக்கையாளர் குமாரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு … Read more

முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு போராட்டத்தில் குதித்த மாணவர் அமைப்பினர்.! மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் திடுக்.!

தஞ்சை மைக்கேல் பற்றி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் லாவண்யா என்ற பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி விடுதியின் அறையை வார்டன் சுத்தம் செய்ய வற்புறுத்தி ஆபாசமாக பேசியதால் விஷம் குடித்ததாக கூறப்பட்டது.  ஆனால் சமூக வலைதளங்களில் அவரை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதாக சர்ச்சைகள் எழுந்தது. மாணவியின் தற்கொலையில் பல சந்தேகங்கள் எழுந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.  … Read more

சேலத்தில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையோரம் பள்ளத்தில் விழுந்து பலி.! <!– சேலத்தில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சால… –>

சேலத்தில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்து பலியானார். சேலம் 5 ரோடு ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற சிலர், சாலையோரம் எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதை பார்த்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் பெயர் சிவா என்பதும் தனியார் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அப்பகுதி ஒருவழிப்பாதை என்று கூறும் போலீசார், … Read more