முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலும், இத்தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், … Read more

அடக்கி வாசிக்கும் ‘உடன்பிறவா’ சகோதரர்கள் | உள்குத்து உளவாளி

கட்சியின் கீழ்மட்டத்தில் நடக்கும் உள்ளடிகள் அவ்வளவாக தலைமைக் கழகங்களை எட்டிவிடாது. அதனால் மாவட்டச் செயலாளர்கள், மாண்புமிகுக்களால் பாதிக்கப்பட்டுக் கிடப்பவர்கள் ‘என்னத்த சொல்ல… எங்க போய்ச் சொல்ல’ என்று மனக்குமுறலைக் கொட்டி பரிகாரம் தேட வழிதெரியாமல் உட்கார்ந்திருப்பார்கள். அப்படி இருப்பவர்களை ஆறுதல்படுத்துவதற்காகவே ‘கழக’ கட்சி தரப்பில் மாவட்ட வாரியாக, ‘உடன்பிறவா’ சகோதரர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார் தலைவர். இதுவரை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சார்ந்த சகோக்களிடம் ஆராய்ச்சி மணி கட்டாத குறையாக ஆதங்கங்களைக் கேட்டு குறித்திருக்கிறாராம் தலைவர். … Read more

புதிய ரேஷன் கார்டு முதல் புதுமைப் பெண் திட்டம் வரை – அமைச்சர் கொடுத்த விளக்கம்

Minister Sakkarapani : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் முக்கியத்துவத்தை அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல்லில் பொதுமக்களிடம் விளக்கினார்.

69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா? – விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: 69 சதவீத இடஒதுக்​கீடு முறை​யாக செயல்​படுத்​தப்​பட்​டதா என்​பது குறித்து நீதிபதி தலை​மை​யில் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்க வேண்​டும்’ என பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: 69 சதவீத இடஒதுக்​கீட்​டைப்பின்​பற்றி பணி​யாளர்​களைத் தேர்வு செய்​யும்​போது, முதலில் பொதுப்​போட்​டிப் பிரிவுக்​கான 31 சதவீத இடங்​கள் தகுதி அடிப்​படை​யில் நிரப்​பப்பட வேண்​டும். அதில் சாதி பார்க்​கக் கூடாது. அதன்​பின், பின்​னடைவுப் பணி​யிடங்​கள் ஏதேனும் இருந்​தால், அவை உரிய இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினரைக் கொண்டு நிரப்​பப்பட வேண்​டும். … Read more

“விஜய் அனுமதி பெற்றுதான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை” – அண்ணாமலை கருத்து

சென்னை: ‘அனு​மதி பெற்​று​த்தான் கரூர் செல்ல வேண்​டும் என்ற நிலை இல்​லை. கரூர் பாது​காப்​பான ஊர். விஜய் தைரிய​மாக வரலாம்’ என அண்​ணா​மலை தெரி​வித்​தார். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தாயார் மறைவையொட்​டி, சென்னை சாலிகி​ராமத்​தில் உள்ள அவரது வீட்​டுக்​குச் சென்று பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை நேற்று அஞ்​சலி செலுத்​தி​னார். அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்​தில் எல்​லோருக்​கும் எந்த இடத்​துக்கு செல்​லவும் உரிமை உண்டு. என்​னைப் பொறுத்தவரை கரூர் சென்று பாதிக்​கப்​பட்ட மக்​களை … Read more

தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்! ரூ.15 லட்சம் எளிய கடன், 15% மானியம் – முழு விவரம்

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு படித்து வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு 15 விழுக்காடு மானியத்துடன் 15 லட்சம் ரூபாய் தொழில் கடன் வழங்குகிறது. முழு விவரம் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வட சென்னையின் முக்கிய ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முக்கிய ரவுடி நாகேந்திரன் நேற்று காலை உடல்நலக் குறைவால் உரிழந்தார். சென்னை வியாசர்பாடியை பூர் வீகமாகக் கொண்டவர் நாகேந்திரன் (52). இவருக்கு உஷா மற்றும் விசாலாட்சி என்ற இரு மனைவிகள். 3 பிள்ளைகள் உள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான மூத்த மகன் அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியின் மாணவரணி முன்னாள் தலைவராகவும் இருந்தார். 2-வது மகன் அஜீத்ராஜ் பாஜக-வில் பொறுப்பில் உள்ளார். 3-வது மகள் ஷாலினி. நாகேந்திரன் ஆரம்ப … Read more

ரேஷன் கார்டு முக்கிய அறிவிப்பு! எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே நாளில் தீர்வு

Ration Card : அக்டோபர் மாத த்துக்கான ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்களுக்கான தேதி வெளியானது. சென்னை, திருப்பூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புராதன சின்னங்கள், கோயில்கள், கட்டிடங்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் புராதன சின்ன ஆணையத்தை அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களில் ஆணையத்தை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன், வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, கோயிலில் சுற்றுச்சுவருக்கு மிக அருகில், கியூ காம்ப்ளக்ஸும், பக்தர்கள் … Read more

தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடியில் நிதியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: தமிழகத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் ‘இணை உருவாக்க நிதியம்’ தொடங்கப்படும் என்று கோவையில் நேற்று தொடங்கிய உலகளாவிய ‘ஸ்டார்ட்அப்’ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு சார்பில், உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ இரண்டு நாள் மாநாடு கோவையில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழகம் ஈர்த்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட 6 மடங்கு … Read more