ஜேம்ஸ் வெப் தொலைகாட்சி அவிழ்க்கும் மர்மங்கள்! தண்ணீர் தோன்றியது எப்படி?

James Webb Space Telescope: நீரால் சூழப்பட்டுள்ள நமது உலகம், உயிர்களால் நிரம்பியுள்ளது! பிரபஞ்சத்தில் தனித்துவமான பூமியில், தண்ணீர் எப்படி வந்தது? கேள்விகளும் விளக்கங்களும்…

இந்தியாவில் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள அமேசான் நிறுவனம்..!

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. தொழில்நுட்ப பங்குகளின் சரிவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் உலகளில் 18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருந்த அமேசான் நிறுவனம், மார்ச் மாதம் மேலும் 9 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது. இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தநிலையை சந்தித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது 500 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. பணிநீக்க செயல்முறை மேலும் தொடரும் … Read more

China begs women to get married | திருமணம் செய்து கொள்ள பெண்களிடம் கெஞ்சும் சீனா

பீஜிங், சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருவதை அடுத்து, திருமணத்தின் முக்கியத்துவம், குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியம் மற்றும் குழந்தை வளர்ப்பின் மகத்துவம் குறித்து, பெண்கள் மத்தியில் அந்நாட்டு அரசு புதிய பிரசாரத்தை துவங்கியுள்ளது. நம் அண்டை நாடான சீனா, உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடாக இருந்தது. எனவே, ஒரு தம்பதிக்கு; ஒரு குழந்தை என்ற கொள்கையை, 1980 முதல் 2015 வரை நடைமுறைப்படுத்தியது. இந்த காலக்கட்டத்தில் சீன மக்கள் தொகை … Read more

சீனாவில் உளவு பார்த்த அமெரிக்கருக்கு ஆயுள் தண்டனை

பீஜிங், சீனாவின் ஒரு பிராந்தியமான ஹாங்காங்கில் வசித்து வருபவர் ஜான் ஷிங் வான் லியுங் (வயது 78). அமெரிக்க நாட்டை சேர்ந்த இவர் ஹாங்காங்கில் நிரந்தர குடியுரிமை வைத்துள்ளார். இவர் மீது சீனாவுக்கு எதிராக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு அந்த நாட்டின் தென்கிழக்கு நகரமான சுசோவில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்தது. இதில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியானது. … Read more

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு: வான் தடுப்பு ஏவுகணைகள், ட்ரோன்களை வழங்க பிரிட்டன் உறுதி

லண்டன்: பிரிட்டன் சென்றுள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார். அப்போது, ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு நூற்றுக் கணக்கான வான் தடுப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வழங்க பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே ஒராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டினார். பிரான்ஸ் அதிபர் … Read more

Fire in New Zealand: 10 dead | நியூசிலாந்தில் தீ விபத்து: 10 பேர் பலி

வெலிங்டன்; நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விடுதியில் 100க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது. வெலிங்டன்; நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு … Read more

துருக்கி அதிபர் தேர்தல்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை – 28-ந் தேதி 2-வது சுற்று தேர்தல்

அங்காரா, துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் தற்போதைய அதிபர் தாயீப் எர்டோகன் ஆட்சி செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் அதிபர் எர்டோகன் சுமார் 49.50 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லு 44.79 … Read more

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு விவகாரத்தில் எலோன் மஸ்க்கிற்கு நீதிமன்றம் சம்மன்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் செய்த பாலியல் கடத்தல் செயல்களுக்கு, ஜேபி மோர்கன் சேஸைப் பொறுப்பேற்கக் கோரிய தனது வழக்கின் ஆவணங்களுக்காக எலோன் மஸ்க்கிற்கு அமெரிக்க விர்ஜின் தீவு நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது

10 ஆண்டு சிறையில் அடைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன்னை தேசதுரோக வழக்கில் ராணுவம் 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த வாரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சியினர் வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை, லாகூரில் ராணுவ அதிகாரியின் வீடு கொளுத்தப்பட்டது தொடர்பாக இம்ரான் கான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் இம்ரான் … Read more

அதிபர் இமானுவல் மேக்ரனுடன் தொழிலதிபர் எலான் மஸ்க் சந்திப்பு

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரனை பாரிசில் சந்தித்து முதலீடுகள் தொடர்பாக தொழிலதிபர் எலான் மஸ்க் ஆலோசனை நடத்தியுள்ளார். ஒருமணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் நேர்மையான அணுகுமுறையுடன் இருவரும் பேச்சுநடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரான்சில் தொழில்களுக்கு முதலீடு செய்வதை ஊக்குவிக்க அந்நாட்டு அதிபர் மேக்ரான் சிறப்பு மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக எலான் மஸ்க்கை அழைத்து பேச்சுநடத்தியுள்ளார். மிகவும் வெளிப்படையான சந்திப்பு என்று பிரானஸ் நிதியமைச்சர் செய்தியாளர்களிடம் விளக்கினார். கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் எலான் மஸ்க்கை இமானுவல் … Read more