பாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை.!

அமிர்தசரஸ், அரபிக்கடலில் கடல்சார் சர்வதேச எல்லையை கடக்கும் மீனவர்கள் மீது அந்தந்த நாடுகளின் பாஸ்போர்டு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை அரபிக்கடலில் அடிக்கடி கடக்கின்றனர். அவர்கள் இரு நாடுகளின் அந்தந்த அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறார்கள். கடல் எல்லையை கடக்கும்போது பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத்தர வேண்டும் என மீனவர்கள் … Read more

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது அமெரிக்கா..!

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஏற்கனவே தங்கள் தொற்றுநோய் தொடர்பான நுழைவு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்ட நிலையில், அமெரிக்கா தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது. இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் 95 விழுக்காடும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 விழுக்காடும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் மே 11 முதல் … Read more

இத்தாலியில் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற வேன் வெடித்து டிரைவர் படுகாயம்

ரோம், இத்தாலியின் மிலன் நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிசிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை ஒரு வேனில் கொண்டு சென்றனர். போர்டா ரோமானா என்ற இடத்துக்கு அருகே வேன் சென்றபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மேலும் அங்கு நின்ற மோட்டார் சைக்கிள்கள், கார்கள் போன்றவை தீப்பிடித்து எரிந்தன. இது குறித்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் இருந்த பள்ளிக்கூடம், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தவர்களை பாதுகாப்பான … Read more

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்கரினோ நியமனம்

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட்டு உள்ளார். ட்விட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துவந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன், புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்திருப்பதாகவும் 6 வாரங்களில் அவர் தனது பணியை தொடங்குவார் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில், பிரபல ஊடக நிறுவனமான NBC Universal-ன் முன்னாள் விளம்பர தலைவராக இருந்த லிண்டா யக்காரினோவை ட்விட்டரின் புதிய சி.இ.ஓ-வாக … Read more

அமெரிக்காவில் எல்லை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றம்

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் டைடில்-42 என்ற கொள்கையை வெளியிட்டார். அந்த கொள்கையானது பொது சுகாதார நலன் கருதி புலம் பெயர்ந்தவர்களை திருப்பி அனுப்ப அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அந்த கொள்கை சமீபத்தில் காலாவதியானது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் எல்லை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டம் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை சுவர் கட்டும் பணியை மீண்டும் தொடங்க அனுமதிக்கிறது. மேலும் அமெரிக்காவில் தஞ்சம் கோரும் நபர்களை தகுதி … Read more

துருக்கியில் டீக்கடையில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு

அங்காரா, துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் சிலர் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் … Read more

புதிய வழக்கில் இம்ரானை கைது செய்ய தடை – இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: மே 9-ம் தேதிக்குப் பிறகு தொடரப்பட்ட எந்தவொரு புதிய வழக்கிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மே 17-ம் தேதி வரை கைது செய்ய தடைவிதித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு இம்ரான் கானை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இம்ரான் கான் நேற்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரின் பயோமெட்ரிக் அடையாளம் சரிபார்க்கப்பட்டு … Read more

கொலம்பியாவில் நீர்மூழ்கி கப்பலில் கடத்தப்படவிருந்த 3 டன் கொக்கைன் பறிமுதல்!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடற்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கடல் வழியாக கடத்த முயன்ற 3 ஆயிரம் கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். கொலம்பிய பசிபிக் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கடற்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மத்திய அமெரிக்காவை நோக்கிச் சென்ற நீர்மூழ்கி கப்பலை இடைமறித்து சோதனையிட்ட அதிகாரிகள், 103 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர். Source … Read more

ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வீசிய உரிமையாளர் கைது – 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பெர்லின், ஜெர்மனியின் டுசல்டார்ப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனையடுத்து அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அங்கு இருந்தவர்கள் மரண பயத்தில் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு … Read more

பூமிக்கு மேல் ராட்சத பலூனில் பறந்தபடி உணவருந்தலாம்… டிக்கெட் விலை ரூ.1.08 கோடி….!

பூமிக்கு மேல், 25 கிலோ மீட்டர் உயரத்தில் உணவருந்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஜெஃபால்டோ (Zephalto) என்ற  அந்த நிறுவனம், அடுத்தாண்டு இறுதியில் ஹீலியம் பலூனுடன் இணைக்கப்பட்ட கேப்சியூலில் சுற்றுலா பயணிகளை வானில் அனுப்ப உள்ளது. ஒன்றரை மணி நேரத்தில், 25 கிலோமீட்டர் உயரத்தை அடையும் அந்த கேப்சியூல், பின் 3 மணி நேரம் வானிலேயே மிதந்துவிட்டு பூமிக்குத் திரும்பும். அதில் பயணிப்பவர்கள், ருசியான ஃபிரெஞ்ச் உணவுகளையும், … Read more